Tuesday, 1 September 2015

1.முகவரியில்லா கல்லூரி காதல்

மூன்றாவது ஆண்டு துவக்கத்தில் அவனது கடைக்கண் பார்வை சக வகுப்பு மாணவியின் மீது பட்டது. சில நாள்களில் இதை மோப்பம் பிடித்து கொண்ட அவனது உயிரினும் மேலான கல்லூரி நண்பர்கள், அவனுக்கு ஆள் கிடைத்து விட்டாள் என மணி அடித்து விட்டார்கள். அப்பெண் கடந்து செல்லும் பொது எல்லாம் அவனது பெயரை உரக்க கூறி அவனையும், அவன் மேல் அவளுக்கும் வெறுப்பேற்றுவார்கள்.

நான்காம் ஆண்டில் அவளிடம் பலமுறை பேச முயன்று அவன் தோற்று போனதுண்டு. ஒரு முறை கூட அவளிடம் பேசாமலேயே அவனது கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டது.

பல வருடங்கள் கழித்து முக புத்தகத்தில் suggested friend-ல் அவள் பெயர் வந்தது.
அதில் நுழைந்து பார்த்தபோது அவளுக்கு திருமணம் முடிந்து இருந்தது, அப்போது அவனுக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகி இருந்தது. Friend request அனுப்பினால் ஏற்று கொள்வாளா மாட்டாளா? என மனதில் பட்டிமன்றம் நடந்து கொண்டு இருக்கும் போதே, add friend request button-ஐ  அழுத்தி விட்டான். சில நாள்களுக்கு பிறகு accepted friend request என குறுஞ்செய்தி வந்தது. பின்பு பல முறை hi, hello என முக புத்தகம் வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பியும் எந்த பதிலும் வர வில்லை.

அவளுடைய கடந்த பிறந்த நாளில் முக புத்தகம் வாயிலாக "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்" என குறுஞ்செய்தி அனுப்பினான். அதற்கு உடனடியாக "nanti" என பதில் வந்தது(கல்லூரி நாள்களில் முக புத்தகம் இருந்து இருந்தால் வசதியாக இருந்து இருக்கும்).

அடுத்து அவன் "party ilaya", பதில் "kuduthuta pochu" இப்படியாக இருவரிடம் இருந்து சில கேள்விகளும், சில பதில்களும் என சற்று நேரம் உரையாடல் நீடித்தது. 

10 வருடங்களாக மனதில் கிடந்த கேள்வியை தூசு தட்டி அவளிடம் கேட்க துணிந்து இறுதியாக கேட்டேவிட்டான். 

"என்னை தெரியுமா" என 

அவளது பதிலை கேட்டு அவனால் சிரிப்பை அடக்கேவே முடியவில்லை, அதை அவன் மனைவிடம் கூறியபோது அவளும் மிகவும் சத்தம் போட்டு சிரித்தாள். அவர்களது இருவரின் சிரிப்பு சத்தம் கேட்டு அவனது ஐந்து வயது மகள் வந்து , 

"எதுக்கு அம்மா சிரிக்குதீங்க"

அவன் மனைவி சிரித்து கொண்டே

"உன் அப்பாவின் கல்லூரி காதல் கதையை கேட்டு மகளே" என பதிலளித்தாள்
.
.
.




அவர்களது  இறுதி உரையாடல்

அவன் "என்னை தெரியுமா"

அவள் "from st.Xavier's rite"  

அவன் மீண்டும் "any other identity"

அவள் "no" 

இரண்டு வருடங்களாக line அடித்த பெண், உன்னை தெரியாது என கூறும் பொது  சிரிக்காமல் வேற என்ன செய்வது.
  

3 comments:

  1. மச்சி "என்னை தெரியுமா" என்ற கேள்விக்கு அவ என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்த்தாய்???

    ReplyDelete
  2. உண்மை உறங்குவதில்லை. ..உயிர் துடிப்புள்ள பதிவு. ...நண்பா you Rock. ..

    ReplyDelete
  3. உண்மை உறங்குவதில்லை. ..உயிர் துடிப்புள்ள பதிவு. ...நண்பா you Rock. ..

    ReplyDelete