Sunday, 24 January 2016

துறைவன்---புத்தகம் என் பார்வையில்


நூலின் ஆசிரியர் கிறிஸ்டோபர் ஆண்டனிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். படிக்கும்போத 20/25 வருடங்களுக்கு முன்பு அழைத்து செல்கிறது.    இரையுமன்துறை  முதல் நீரோடி வரை உள்ள 8 கிராமங்களும் தங்களது தனிதன்மை கொண்ட மொழியால் வேறுபட்டு உள்ளன. இதுபோல் வேறு எங்குமே காண முடியாது என எண்ணுகிறேன். நமது வட்டார மொழியை மிக அருமையாக பதிவு செய்து இருக்கின்றீர்கள். நமது அடுத்த தலைமுறை இந்த வட்டார மொழிகளை இது போன்ற ஒருசில புத்தகங்களில் மட்டும் தான் பார்த்து தெரிந்து கொள்ள இயலும் என நம்புகிறேன். 

=======================
ஆழிச்சுழி
=======================
ஆனியாடி இடிகரை மற்றும் மரம்புடி தொழிலை மிக அருமையாக பதிவு செய்து இருக்கின்றீர்கள்.

"போ...போ..."

"போ...ல...போ...ல..."

"கீளாட்டுபோ...கீளாட்டுபோ... "

"மலத்துலே...மலத்துலே..."

"தொளா...தொளா..."

"தொளா...ல    தொளா...ல"

"கீளாட்டு தொளா...கீளாட்டு தொளா..."


இந்த சத்தத்தை வைத்தே வீட்டில் இருக்கும் பெண்களும், பெரியவர்களும் மரம் கடல் தாண்டி சென்றதையும், கடல் அடித்து கரை திரும்பியதையும் கூறுவார்கள்.

மரம்புடியாளி மரம் புறப்பட்ட பிறகு அடுத்த மரத்தை தேடி ஓடும் காட்சி, யுத்தகளத்தில் போர் வீரர்கள் ஓடுவதை போல தோன்றும். சிறு வயதில் கடற்கரையில் நின்று மரம் புறப்படும் காட்சியை பார்த்ததை,  இப்பொது நினைக்கும் போது ஆங்கில action திரைப்படம் பார்த்தது போல் ஒரு உணர்வு.

ஆனியாடி மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பும் முன்பே சீலாந்தி பட்டை போட்டு கொதிக்க கொதிக்க சுடு தண்ணி வீட்டின் முன்பு பெரிய பானைகளில் காச்சுவர்கள். இதற்காகவே எனது ஆத்தாவால்(பாட்டியால்) எங்களது வீட்டின் முன்பு ஒரு சீலாந்தி மரம் வளர்க்கபட்டது.

=======================
 கடற்குதிரை 
=======================

கடற்குதிரை படித்த போது, நித்திரவிளைலிருந்து எங்கள் ஊர் பூத்துறை வரை நண்பர்களுடன் நடந்து  செல்லும் போது சின்னத்துறை மணற்பரப்பில் சற்று நேரம் அமர்ந்து அரட்டை அடித்து விட்டு மேலும் நடையை தொடரும் பள்ளி பருவமே நினைவிற்கு வந்தது. 

இயந்திர வாழ்க்கையில் இப்பொது ஊரில் இருக்கும் கோவிலுக்கு கூட கால்கள் நடக்க மறுத்து  இயந்திரத்தின் உதவியை நாடுகிறது.

 குடிசை எனும் வரியை குறித்து மிக அருமையாக பதிவு செய்து இருக்கிறார். 

"நாமளே எரப்பம்மாரு, எரப்பன் எரந்து எரப்பாளிச்சு கொடுக்கணும்.சேலு கொள்ளம். எதுக்கு குடிசை கொடுக்கணும்"

"ஏண்ணா கோயிலு நம்ம சொத்து. நம்ம பணத்தில கெட்டினது" 

வட்டி தொழிலை குறித்த உரையாடலில்...

"இப்போ நாம எல்லாரும் நம்ம கையில இருக்குத பைசாவ என்ன செய்யுவோம்"

"பைசாவ பலிசைக்கு கொடுப்போம் "

"ஆமா நாம வட்டிக்கு கொடுக்கோம், யாராவது அந்த பணத்துக்கு வெல்லதும் எடமோ பெரேடமோ வேங்கிப் போடுதமா?"

"இல்ல"

"அதுதான் பெரிய தப்பு. இனிவருத காலங்களில எடங்க யாருட்ட இருக்கோ அவங்களுக்குதான் காலம்" 

No comments:

Post a Comment