கல்லூரி நாட்களில் பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்துவிட்டு இறுதியாண்டு
தேர்வு காலத்தில் மனதில் எழுந்த கேள்வி "அடுத்து என்ன?". பெற்றோரின் தயவில்
23 வருடங்கள் கடந்து சென்றுவிட்டன. மீண்டும் பெற்றோரிடம் செலவுக்கு கை
ஏந்தி நிற்க மனமும் துணிவும் வரவில்லை. அன்று தோன்றியதுதான் மும்பைக்கு
சென்று வேலை தேடவேண்டும் என்று.
விடுமுறை
நாள்களில் ஊருக்கு வந்த மும்பை வாழ் நண்பர்களிடம் மும்பையில் உள்ள வேலை
வாய்ப்புகள் குறித்து விசாரித்து, என்னை அறியாமலே மனதில் ஒரு கற்பனை
கோட்டை கட்டி எழும்பி கொண்டு இருந்தது. மும்பைக்கு போக துணிந்த காரணமே,
எங்கள் ஊர் பூத்துறை சார்பாக மும்பையில் ஒரு வீடு இருந்தது. சாப்பிட காசு
இல்லை என்றாலும் தங்க ஒரு இடமுண்டு எனும் நம்பிக்கை தான் என்னை போன்று
புதிதாக வேலை தேடி மும்பை செல்பவர்களுக்கு உந்துதலாக இருந்தது, இருந்து
கொண்டிருக்கிறது.(அப்படி ஒரு வீடு மும்பையில் கிடைக்க
காரணமாக இருந்த திரு.மரியதாசன் மற்றும் காலம்சென்ற திரு.முத்தையன்
அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்). இதுவே பின்னாளில் என்னை சிங்கார சென்னையில் பூத்துறை வாழ் சகோதரர்கள் சார்பாக ஒரு தனி வீடு வாடகைக்கு எடுப்பதற்கு உந்துதலாக இருந்தது.
மும்பை
ஜூன் 2005-ம் ஆண்டு என்னையும் சுமந்து திருவனந்தபுரத்தில் இருந்து மும்பையை நோக்கி புகைவண்டி நகர ஆரம்பித்த அந்த சில நொடிகளுக்குள் முதல் முறையாக தனிமையின் வலியை உணர ஆரம்பித்தேன். அம்மா, அப்பா, தம்பி, தங்கை மற்றும் நண்பர்கள் என ஒவ்வொருவராக கண்முன் வந்து எனது கண்ணிமையில் சிறு நீர்த்துளியை விதைத்து சென்றார்கள். அன்று மும்பையில் ஆரம்பித்த நகர(நரக) வாழ்க்கை சென்னை, சவுதி அரேபியா என கடந்து இப்பொது UAE-ல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
மும்பையில் சென்ற சில மாதங்களுக்கு பிறகு IT Programmer ஆக ஒரு அலுவகலத்தில் வேலை கிடைத்தது. சில நாள்களுக்குள் அலுவகத்தில் இருந்த ஒரு ஆந்திர நண்பரின் politics ஆல் ஒரு மாதத்திற்கு உள்ளேயே அலுவகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு வேலை இல்லா பட்டதாரி ஆக்கப்பட்டேன். மீண்டும் interview - followup, interview - followup என வாழ்க்கை நகர ஆரம்பித்தது.
ஒரு மாதத்திற்கு பின்பு ICFAI - ல் IT System Admin-அக பணி கிடைத்தது. வேலைக்கு சேர்ந்த சில நாள்களுக்கு பிறகுதான் என்னால் உணர முடிந்தது, நான் 6 வருடங்கள்(3 வருட diploma in computer technology + 3 வருட BTech in Information Technology) கற்ற தொழில்நுட்ப கல்லூரி என்பது இவ்வுலகில் வாழ கற்றுகொடுத்ததே தவிர, தொழில் செய்யும் முறையை கற்று கொடுக்கவில்லை என்பதை. மீண்டும் வேலையை உதறிவிட்டு தொழில் செய்யும் முறையை கற்க சென்னைக்கு புகைவண்டி பயணம்.
சென்னை
வந்தாரை வாழவைக்கும் சென்னை எனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கும் என எண்ணி சென்னை மண்ணில் என் கால் தடத்தை பதித்தேன்.
(தொடரும்)

தொடரட்டும் உன் உணர்வுள்ள எழுத்து பயணமும். ...வாழ்க்கையின் வெற்றி பயணமும். ..
ReplyDeleteதொடரட்டும் உன் உணர்வுள்ள எழுத்து பயணமும். ...வாழ்க்கையின் வெற்றி பயணமும். ..
ReplyDeleteThank u justin..
Delete