Tuesday, 22 September 2015

3.MRDT - மோசடி


இன்றைய சமூகத்தில் ஒருவர் கற்றவரா, பண்பாளரா என்பதையெல்லாம் தாண்டி அவர் செல்வந்தரா என்பது முக்கிய தகுதியாய் இருக்கிறது. செல்வந்தராக இருந்தால், அவர் எவ்வழியில் செல்வந்தர் ஆனார் என்பதெல்லாம் பார்க்கப்படுவதில்லை. இன்றைய உலகில் பெரும்பாலானோர் உடனடி பணக்காரராகிவிட வேண்டும் என்று எண்ணி , உழைக்காமல் குறுகிய காலத்தில் பணம் சேர்த்துவிட வேண்டும் என யோசித்து  கொண்டு இருக்கிறார்கள். இப்படி எப்படியாவது பணம் சேர்த்துவிட வேண்டும் என நினைப்பவர்கள் வெகு சீக்கிரமாக மோசடி கும்பலின் வலையில் சிக்குவதுண்டு.

தினம் தினம் செய்திதாள்களிலும், தொலைகாட்சி பெட்டிகளிலும் மோசடி செய்திகளை பற்றி நாம் கேள்விபட்டாலும் முதலீடு விஷயத்தில் பேராசை அளவுக்கு அதிகமாக இருப்பதால் மோசடி மிக எளிதாக நடக்கிறது. ஒரு மோசடி நடந்து முடிந்த அதே நேரத்தில் அடுத்த மோசடி சத்தமில்லாமல் துவங்கியிருக்கும். முந்தைய மோசடிக்கு அதிர்ச்சி தெரிவித்தவர், இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவராக இருப்பார்கள். பணமோசடி கும்பல்களின் குறிக்கோளே முதலில் முதலீடு செய்பவர்களுக்கு பணத்தை அள்ளி வழங்கி விட்டு, இறுதியில் ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவது தான்.

இந்த மாய வார்த்தைகளை கேட்டு முதலில் ஒரு ஐம்பாதியிரம் போட்டு தான் பார்ப்போமே என அடுத்த நபர் துவங்குவார். அன்று துடங்கும் அவரது வாழ்வின் கரிகாலம். இதுபோல் மோசடி கும்பலிடம் சிக்காமல் இந்நாள் வரை பாதுகாப்பாக இருந்தவர்கள் எமது மீனவ கிராமங்கள். ஆனால் இப்போது பல குடும்பங்கள் MRDT-ல் பணத்தை இழந்து பரிதவிகின்றனர்.

MRDT நிறுவன மோசடி

MRDT நிறுவனத்தின் மிக கவர்ச்சியான திட்டம் என்பது 1 லட்சம் பணம் செலுத்தி இணைந்தால், மாதம் ரூ.8,000 வீதம் 36 மாதங்களுக்கு வழங்கப்படும் (36x8000=2,88,000).மூன்று வருட முடிவில் அசல் திரும்பத் தரப்படமாட்டாது!. இதே பணத்தை பேங்க்கிலோ, ஊரில் யாரிடமாவது  கொடுத்தால் ஒன்று அல்லது இரண்டு பைசா வட்டி கிடைக்கும், MRDT போட்டால் ஒரு வருடத்தில் போட்ட முதல் கையில் கிடைக்கும் என்பது தான் எமாற்று கும்பலின் திட்டம்.


இத்திட்டத்தில் சேர்ந்த நபர்கள்  பேசுவதுதான் பணமோசடி கும்பலின் ஆரம்ப கட்ட இலவச விளம்பரம். ஆதலால் இத்திட்டத்தில் ஆரம்பத்தில் சேரும் நபர்களுக்கு, அடுத்தடுத்து வந்துசேரும் நபர்களின் முதலீட்டு பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். "எனக்கு கரெக்டா பணம் வந்துடுச்சு. திரும்பவும் ஒரு ரெண்டு லட்சத்தை கட்டியிருக்கேன். ஒரே வருஷத்துல ரெண்டு லட்சமும் வந்துடும்”, அப்புறம் வரும் பணம் எல்லாம் லாபம்தான்.

மூன்று, நான்கு மதங்கள் கூறியது போல மாத தவணை 8000 வைத்து கொடுத்துவிட்டு, கல்லா நிறைந்த உடன் பணமோசடி கும்பல் தலை மறைவு ஆகிவிட்டார்கள். இப்போது பல குடும்பங்கள் MRDT-ல் பணத்தை இழந்து பரிதவிகின்றனர், பலர் யாரிடம் சென்று முறையிடுவது என கூட தெரியாமல் தத்தளித்து கொண்டு இருகிறார்கள்.
     
மீண்டும் சில காலம் கழிந்து மற்றொரு பெயரில் நம்மை ஏமாற்ற இப்பொழுதே ஒரு கழுகு கூட்டம் எதோ ஒரு மூலையில் சதி திட்டத்தோடு காத்து கொண்டு இருக்கிறது.  நம்முடைய விழிப்புணர்வுதான் நம்மை இது போன்ற மோசடி கும்பலிடம் இருந்து காப்பாற்றும். மக்களே ஏமாறாமல் விழித்துத்திருங்கள்.

Sunday, 13 September 2015

பயணம் தொடர்கிறது...

கல்லூரி  நாட்களில் பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்துவிட்டு இறுதியாண்டு தேர்வு காலத்தில் மனதில் எழுந்த கேள்வி "அடுத்து என்ன?". பெற்றோரின் தயவில் 23 வருடங்கள் கடந்து சென்றுவிட்டன. மீண்டும் பெற்றோரிடம் செலவுக்கு கை ஏந்தி நிற்க மனமும் துணிவும் வரவில்லை. அன்று தோன்றியதுதான் மும்பைக்கு சென்று வேலை தேடவேண்டும் என்று.

விடுமுறை நாள்களில் ஊருக்கு வந்த மும்பை வாழ் நண்பர்களிடம் மும்பையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விசாரித்து, என்னை அறியாமலே மனதில் ஒரு கற்பனை கோட்டை கட்டி எழும்பி கொண்டு இருந்தது. மும்பைக்கு போக துணிந்த காரணமே, எங்கள் ஊர் பூத்துறை சார்பாக மும்பையில் ஒரு வீடு இருந்தது. சாப்பிட காசு இல்லை என்றாலும் தங்க ஒரு இடமுண்டு எனும் நம்பிக்கை தான் என்னை போன்று புதிதாக வேலை தேடி மும்பை செல்பவர்களுக்கு உந்துதலாக இருந்தது, இருந்து கொண்டிருக்கிறது.(அப்படி ஒரு வீடு மும்பையில் கிடைக்க காரணமாக இருந்த திரு.மரியதாசன் மற்றும் காலம்சென்ற திரு.முத்தையன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்). இதுவே பின்னாளில் என்னை சிங்கார சென்னையில் பூத்துறை வாழ் சகோதரர்கள் சார்பாக ஒரு தனி வீடு வாடகைக்கு எடுப்பதற்கு உந்துதலாக இருந்தது.

மும்பை
ஜூன் 2005-ம் ஆண்டு என்னையும் சுமந்து திருவனந்தபுரத்தில் இருந்து மும்பையை நோக்கி புகைவண்டி நகர ஆரம்பித்த அந்த சில நொடிகளுக்குள் முதல் முறையாக தனிமையின் வலியை உணர ஆரம்பித்தேன். அம்மா, அப்பா, தம்பி, தங்கை மற்றும் நண்பர்கள் என ஒவ்வொருவராக கண்முன் வந்து எனது கண்ணிமையில் சிறு நீர்த்துளியை விதைத்து சென்றார்கள். அன்று மும்பையில் ஆரம்பித்த நகர(நரக) வாழ்க்கை சென்னை, சவுதி அரேபியா என கடந்து  இப்பொது UAE-ல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

மும்பையில் சென்ற சில மாதங்களுக்கு பிறகு IT Programmer ஆக ஒரு அலுவகலத்தில் வேலை கிடைத்தது. சில நாள்களுக்குள் அலுவகத்தில் இருந்த ஒரு ஆந்திர நண்பரின் politics ஆல் ஒரு மாதத்திற்கு உள்ளேயே அலுவகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு வேலை இல்லா பட்டதாரி ஆக்கப்பட்டேன். மீண்டும் interview - followup, interview - followup என வாழ்க்கை நகர ஆரம்பித்தது.

ஒரு மாதத்திற்கு பின்பு ICFAI - ல் IT System Admin-அக பணி கிடைத்தது. வேலைக்கு சேர்ந்த சில நாள்களுக்கு பிறகுதான் என்னால் உணர முடிந்தது, நான் 6 வருடங்கள்(3 வருட diploma in computer technology + 3 வருட BTech  in Information Technology) கற்ற தொழில்நுட்ப கல்லூரி என்பது இவ்வுலகில் வாழ கற்றுகொடுத்ததே தவிர, தொழில் செய்யும் முறையை கற்று கொடுக்கவில்லை என்பதை. மீண்டும் வேலையை உதறிவிட்டு  தொழில் செய்யும் முறையை கற்க சென்னைக்கு புகைவண்டி பயணம்.

சென்னை
வந்தாரை வாழவைக்கும் சென்னை எனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கும் என எண்ணி சென்னை மண்ணில் என் கால் தடத்தை பதித்தேன்.
(தொடரும்) 
 

Tuesday, 1 September 2015

1.முகவரியில்லா கல்லூரி காதல்

மூன்றாவது ஆண்டு துவக்கத்தில் அவனது கடைக்கண் பார்வை சக வகுப்பு மாணவியின் மீது பட்டது. சில நாள்களில் இதை மோப்பம் பிடித்து கொண்ட அவனது உயிரினும் மேலான கல்லூரி நண்பர்கள், அவனுக்கு ஆள் கிடைத்து விட்டாள் என மணி அடித்து விட்டார்கள். அப்பெண் கடந்து செல்லும் பொது எல்லாம் அவனது பெயரை உரக்க கூறி அவனையும், அவன் மேல் அவளுக்கும் வெறுப்பேற்றுவார்கள்.

நான்காம் ஆண்டில் அவளிடம் பலமுறை பேச முயன்று அவன் தோற்று போனதுண்டு. ஒரு முறை கூட அவளிடம் பேசாமலேயே அவனது கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டது.

பல வருடங்கள் கழித்து முக புத்தகத்தில் suggested friend-ல் அவள் பெயர் வந்தது.
அதில் நுழைந்து பார்த்தபோது அவளுக்கு திருமணம் முடிந்து இருந்தது, அப்போது அவனுக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகி இருந்தது. Friend request அனுப்பினால் ஏற்று கொள்வாளா மாட்டாளா? என மனதில் பட்டிமன்றம் நடந்து கொண்டு இருக்கும் போதே, add friend request button-ஐ  அழுத்தி விட்டான். சில நாள்களுக்கு பிறகு accepted friend request என குறுஞ்செய்தி வந்தது. பின்பு பல முறை hi, hello என முக புத்தகம் வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பியும் எந்த பதிலும் வர வில்லை.

அவளுடைய கடந்த பிறந்த நாளில் முக புத்தகம் வாயிலாக "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்" என குறுஞ்செய்தி அனுப்பினான். அதற்கு உடனடியாக "nanti" என பதில் வந்தது(கல்லூரி நாள்களில் முக புத்தகம் இருந்து இருந்தால் வசதியாக இருந்து இருக்கும்).

அடுத்து அவன் "party ilaya", பதில் "kuduthuta pochu" இப்படியாக இருவரிடம் இருந்து சில கேள்விகளும், சில பதில்களும் என சற்று நேரம் உரையாடல் நீடித்தது. 

10 வருடங்களாக மனதில் கிடந்த கேள்வியை தூசு தட்டி அவளிடம் கேட்க துணிந்து இறுதியாக கேட்டேவிட்டான். 

"என்னை தெரியுமா" என 

அவளது பதிலை கேட்டு அவனால் சிரிப்பை அடக்கேவே முடியவில்லை, அதை அவன் மனைவிடம் கூறியபோது அவளும் மிகவும் சத்தம் போட்டு சிரித்தாள். அவர்களது இருவரின் சிரிப்பு சத்தம் கேட்டு அவனது ஐந்து வயது மகள் வந்து , 

"எதுக்கு அம்மா சிரிக்குதீங்க"

அவன் மனைவி சிரித்து கொண்டே

"உன் அப்பாவின் கல்லூரி காதல் கதையை கேட்டு மகளே" என பதிலளித்தாள்
.
.
.




அவர்களது  இறுதி உரையாடல்

அவன் "என்னை தெரியுமா"

அவள் "from st.Xavier's rite"  

அவன் மீண்டும் "any other identity"

அவள் "no" 

இரண்டு வருடங்களாக line அடித்த பெண், உன்னை தெரியாது என கூறும் பொது  சிரிக்காமல் வேற என்ன செய்வது.
  

FLASHBACK

எனதருமை நண்பர்கள் 

Name                                     Living @
1.Albert         
                        UAE2.Borjan                                UAE
3.Finion                                UAE
4..Golbin                              UAE
5.JohnAlex                           UAE
6.Joy           
                         UAE
7.Mahesh                              UAE
8.Ouseph                              UAE
9.Shibu                                 UAE  
10.Biju                                 UAE 
11.Jose                                 UAE  

2.Augustin                             Saudi
3.Binu           
                        Mumbai5.Cleetus                                Poothurai12.Justin                                  Nigeria
14.Mariajohn    
                      Poothurai
15.Melbin       
                         Mumbai
16.Nelson       
                         Qatar
18.RaviKumar 
                       Poothurai
20.Spirjin        
                       Poothurai
20.Stylook      
                         Poothurai
21.Tony         
                          Qatar

பி றப்பிடம் :  பூத்துறை
சாதி மத  பேதமின்றி நிமிர்ந்து நிற்கும் நகரம், இல்லை அரசியல் கூத்துபடி கிராமம் அதுவும் குக்கிராமம்(அரசியல் வாதிகளே வந்து பாருங்கள் எங்களது வாழ்க்கை முறை உங்களுக்கு புரியும்). எமது ஊரில் பெரும்பாலும் கிறிஸ்தவ குடும்பம், ஆனால் எங்களுக்கு ஒரு ஆலயம் மட்டும் தான் உண்டு. எனதருமை முஸ்லிம் சகோதரர்களுக்காக இரண்டு பெரிய மசூதிகளையும் , எனதருமை இந்து  நண்பர்களுக்காக  இரண்டு பெரிய அம்பலங்களயும் தாங்கி நிற்கிறது எங்கள் பூத்துறை.

எமது குலதொழில்: மீன் பிடித்தல்
எங்களது ஊரில் 98% மக்களின் குலத்தொழில் மீன் பிடித்தல், கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது இந்து மற்றும் முஸ்லிம் சகோதரர்களும் மீன்பிடி தொழில் செய்வதுண்டு. ஞாயிற்றுகிழமைகளில் கிறிஸ்தவர்களுக்கு ஓய்வும், மற்ற சகோதரர்கள் கடலுக்கும் செல்வார்கள். அதனால் வாரத்தின் அனைத்து நாள்களிலும் நல்ல மீன்கள் கிடைப்பதுண்டு.

எமது  வாழ்க்கைமுறை 
மருத்துவ தந்தையின் கனவு, தனது  பிள்ளையை மருத்துவன் ஆக்குவது. பொறியாளனின்  கனவு, தனது  பிள்ளையை பொறியாளன் ஆக்குவது. அரசியல்வாதியின் கனவு, தனது  பிள்ளையை அரசியல்வாதி ஆக்குவது. ஆனால் எங்களின் பெற்றோரின் கனவு தமது பிள்ளைகள் பள்ளிக்கு சென்று எழுத படிக்க கற்றால் போதும் என்பது. ஆதலால் 1980-ளின் இறுதியில் பிறந்த அனைவரும் குறைந்தது 8-ம் வகுப்பு வரை படித்து இருப்போம்.


பள்ளி பருவத்தில் மறக்காமல் இருக்க நினைப்பது...


வகுப்பு 1-3

  • பூத்துறை முதல் பள்ளிக்கூடம்(சின்னத்துறை ) வரை நடந்து செல்வது.
  • பள்ளிக்கூடம்முடிந்து வரும்போது ரோட்டில் 1,2,3... எழுதி கொண்டே வீடு வந்து சேருவது.
  • சில நாள்கள் கடற்கரை வழியாக வருவது.
  • தூங்கு வாணிச்சி துசியன்,கலியொடக்கை,அச்சாறு மற்றும் பல.
வகுப்பு 4 to 8
  • பூத்துறை பள்ளிக்கூடம் பழைய கான்வெண்டில் துவங்கி, திருமண மண்டபம் மற்றும் பள்ளிக்கூடத்தில் படித்தது.
  • கார்லொஸ் தொட்டியில் கால்பந்து விளையாட்டு.  
  • போட்டோ எடுத்து பிலிம்மில் போட்டோ பதிந்ததா என்று கேமராவை திறந்தது. 
  • சயங்கால வேளைகளில் மட்டை பந்து, வாலு புடுங்கல்,கெலப்பை, ஊட்டி சோறு பண்ணி சோறு,கச்சி,பிலிம் விளையாட்டு, பேப்பர் விளையாட்டு.
  • இரவு - திருவிழா காலங்களில் பெரிய திரையில் சினிமா,
  • திருமண, ஜானஸ்தான வீட்டில்,சின்ன திரையில் மூன்று சினிமா காண்பிப்பது. 
  • திருமண வீடுகளில் அம்மா உடன் சென்று, இலவியாரத்துக்கு சாப்பிடுவது.
  • Johnalex -ன்  புதுநன்மை. 
  • மிதி வண்டியின் ஆரம்ப காலம். 
  • மணெண்ணெய் விளக்கில் படித்தது.
  • படிப்பகத்தில் ஒளியும் ஒலியும் பார்ப்பது.

வகுப்பு 9-12
  • trucker-ல மற்றும் பஸ்பாஸ்-ல் பள்ளிக்கு செல்வது.
  • மதியம் சாப்பிடுவதற்கு நடந்து வீட்டிற்கு வருவது.
  • நண்பனுக்கு திருமண அழைப்பிதழ் கிடைத்தால் அனைவரும் சென்று ஒரு கை பார்ப்பது.
  • இரு சக்கர வாகனத்தின் ஆரம்ப காலம்.
  • பெண்ணுக்க கூட பேசினால் காதல். 
  • எங்களது வகுப்பில் 28 பேர் +2 தேர்வு எழுதி ஒருவர் மட்டும் பாஸ்.
  • வகுப்பு கட் அடித்து கிரிக்கெட் பார்க்க செல்வது. 
  • ஊரே ஒன்றாக இருந்து படிப்பகத்தில்கிரிக்கெட் பார்ப்பது.

இளமை தந்த நினைவுகள்...
  • சிலநாள் அதிகாலை வேளைகளில் ஒத்தப்பன கள்ளு. 
  • காலை பழைய வாலிபால் விளையாட்டு திடலில் மூவர்  கால்பந்து.
  • பாலம் ஆற்றில் பாலத்தின் மேல் இருந்து குதிப்பது.
  • வீட்டில் காலை கஞ்சி(மஞ்ச தண்ணி, புளியும் மொளவும்).
  • மதிய  வேளைகளில் எடப்பாடில் கிரிக்கெட் மற்றும்  சீட்டு விளையாட்டு.
  • நான்கு மணிக்கு மதிய சாப்பாடு வீட்டில்.
  • சயங்கால வேளைகளில் மதிலில் கால்பந்து.
  • கடற்கரை மணலில் இரவு அரட்டை.
  • சில சமயம் நித்திரவிளை திரை அரங்கில் இரவு காட்சி.
  • கடற்கரை மணலில் இரவு தூக்கம்(கிறிஸ்துராஜா குருசடி மற்றும் எடப்பாடு)
  • டெஸ்ட் கிரிக்கெட் பார்க்க பொழி கடந்து ராமன்துறை யில் சென்றது. 
  •  மம்மோன் கடை பாயசம் மற்றும் பழரோஸ்ட்.
நமது பிள்ளைகள் இழப்பது...

  • மட்டை பந்து, வாலு புடுங்கல்,கெலப்பை, ஊட்டி சோறு பண்ணி சோறு,கச்சி,பிலிம் விளையாட்டு,பேப்பர் விளையாட்டு.
  • கடற்கரை மணல் மற்றும் தூக்கம். 
  • ஆறில் குளிப்பது மற்றும் நீச்சல்.

2.எங்கே செல்கின்றன நமது மீனவ கிராமங்கள்...


“தனி மனிதன் முன்னேற்றம் அடைந்தால், அவனது குடும்பம் முன்னேற்றம் அடையும். குடும்பம் முன்னேற்றம் அடைந்தால், அவனது கிராமம் முன்னேற்றம் அடையும். கிராமம் முன்னேற்றம் அடைந்தால், அவனது நாடு முன்னேற்றம் அடையும்.”

நாம் முன்னேறுகிறோம், நமது குடும்பம் முன்னேறுகிறது ஆனால் நமது கிராமம் முன்னேறியதா???

1990- ஐ கடந்த பின்பு நமது ஊர்களில் பெரிய பெரிய கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் பல கோடி ரூபாய் செலவழித்து ஊர் மக்களின் வரி பணத்தால் கட்டி முடிக்க பட்டு உள்ளன. இது ஊருக்கு ஊர் போட்டி மனப்பான்மை வளர்ந்ததால் ஏற்பட்ட மாற்றமே அல்லாமல் ஒருபோதும் மனிதர்களும், குடும்பங்களும் பெருகியதால் வந்த மாற்றம் கிடையாது.

கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களை கட்டி காக்க முனைப்பு காட்டிய நாம், இயற்கை நமக்கு கொடுத்த சுவையான குடிநீரையும், குளிப்பதற்கு இருந்த ஆறையும், பல வரி வீடுகளையும், நமது வாழ்வாதரமான பரந்து விரிந்த கடற்கரையும் கட்டி காக்க தவறிவிட்டோம். குடிக்க குடிநீரும், கல்லூரிகளும், பொது கழிப்பிட வசதியும், கடற்கரையையும் அரசாங்கத்திடம் எதிர் பார்க்கும் நாம்;  கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் கட்டும்போது மட்டும் ஊர் மக்களுக்கு வரி போட்டு, மக்களின் இரத்தத்தை உறிந்து பல கோடிகள் செலவு செய்வது ஏன்???

குடிநீர்

ஒரு சாதாரண குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு 3 முதல் 5 குடிதண்ணீர் கேன் தேவைப்படுகிறது, மாதத்திற்கு 12 முதல் 20 தண்ணீர் கேன். ஒரு குடிதண்ணீர் கேனின் விலை 40 ரூபாய் ஆக மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 480 முதல் 800 ரூபாய். ஒரு கணக்கிற்காக ஒரு ஊரில் 300 குடும்பங்கள் கேன் தண்ணீர் உபயோக படுத்துகிறார்கள் எனில் மாதத்திற்கு 144000 ரூபாய் (300 x 480) முதல் 240000 ரூபாய் (300 x 800). இரயுமன்துறை முதல் இரவிபுத்தன்துறை வரை 5 கிராமங்கள், ஆக 7.2 முதல் 12 லெட்சம் வரை ஒரு மாதத்திற்கு நமது மீனவ குடும்பங்கள் செலவு செய்கின்றன.

பல கோடிகள் செலவு செய்து கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் கட்டும் நமக்கு ஏன் நமது ஊர்கள் சார்பாக பல லெட்சம் ரூபாய் செலவு செய்து குடிநீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் அமைத்து நல்ல குடிநீர் வழங்க முடியாது?

தொழில்நுட்ப கல்லூரி

நமது ஊர்களை சேர்ந்த பல மாணவர்கள் வெளிஊர்களில் தங்கி ITI, Diploma, Engineering மற்றும் மேற்படிப்பு படிப்பதற்கு விடுதிக்கு மட்டும் வருடத்திற்கு 50,000 ரூபாய் முதல் 70,000 வரை செலவு செய்கிறார்கள். பல குடும்பங்கள் இதன் காரணமாக நாகர்கோயில் மற்றும் சென்னை- யில் வாடகைக்கு குடி பெயர்ந்து உள்ளனர்.      

பல கோடிகள் செலவு செய்து கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் கட்டும் நமக்கு ஏன் நமது ஊர்கள் சார்பாக ஒரு தொழில்நுட்ப  கல்லூரி துவங்க முடியாது?

பொது கழிப்பிடம்

நமது ஊர்களில் திருவிழா காலங்களில் 3 முதல் 4 மணி நேரம் வரை கோயிலில் ஆரதனை மற்றும் திருப்பலிகள் நடை பெறும். இத்தருணங்களில் பெண்களுக்கு இயற்கை உபாதைகளுக்கு செல்லவோ, கைகுழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டவோ போதிய வசதிகள் நாம் இதுவரை செய்து கொடுக்க வில்லை.               

பல கோடிகள் செலவு செய்து கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் கட்டும் நாம்  ஏன் சில லெட்சம் ரூபாய் செலவு செய்து நமது தாய், சகோதிரி, மனைவி மற்றும் மகள்களுக்கும் சில லெட்சம் ரூபாய் செலவு செய்து நல்ல கழிப்பிட வசதியும், தாய்ப்பால் கொடுக்கும் அறையோ கட்ட முடியவில்லை.

அடுத்ததை இழக்கும் முன் சிந்திப்போம் செயல்படுவோம் உடன்பிறப்புகளே...