Monday, 28 December 2015

"Save Water Save Life"

 

தாய்பாலும் தண்ணீரும் விலையில்லாமல்  இருந்தது
இப்போ எல்லாமே தலைகீழா போகுது
தடம் மாறி நிக்குது.

நிலாவுல தண்ணீர் இருக்கானு தேடுகிறோம்-ஆனால் 
பூமியில குடிநீர வியாபாரம் பண்ணுகிறோம்.

ஆறு இருக்கும் பக்கத்திலே ஊரு உருவானது.
 இப்போ ஊரு மட்டும் இருக்குது
ஆறுகள காணவில்லை.

குறவன் வளர்த்த காடுகள பாவிசனம் அழிக்குது 
நன்றி மறந்து சிரிக்குது
ஆறு அறிவ வச்சிக்கிட்டு ஆணவத்தில் மிதக்குது.

மண்ணை போல தண்ணீருக்கும் 
எல்லை கோடு போடுறோம்
வறுமை கோட்டை வளர்க்கிறோம்.

இயற்கையை பூட்டிவச்சு 
பொம்மையாக்க பாக்கிறோம் 
அடிமையாக்க நினைக்கிறோம் 

இப்படியே போனால் பூச்சியும் புழுவும் வாழும்
ஆறு அறிவு கொண்ட மனித இனம் மட்டும் 
காணாமல் போகும்!!!

Source : https://www.youtube.com/watch?v=-BKpcvFhuXA