pic : from Cleetus wilfred FB post
கல்லூரி நாள்களில் 10 ரூபாய் கொடுத்து 1 லிட்டர் தண்ணீர் வாங்கும்போது பிற மாவட்ட நண்பர்களிடம் மிக பெருமையாக சொல்லுவது உண்டு, "இதை விட மிக அருமையான தண்ணீர் எங்கள் ஊரில் தெரு குழாய்களில் இலவசமாக கிடைக்கும்". கல்லூரி முடித்து சென்னையில் சென்ற பின்பு தான் தண்ணீர் பாட்டில்கள் நிரந்தர இடம் பிடித்தன தங்கும் அறைகளில். அப்போது நினைத்து கூட பார்த்தது கிடையாது நமது ஊரிலும் தண்ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டி வரும் என !!!.
சிறு வயதில் நம் ஊரில் ஆங்கேங்கே கிணறுகள் இருந்தன. ஆற்றில் தண்ணீர் மிக மோசமாக இருந்தால் அனைவரும் கிணற்றில் தான் குளிப்பதும் துணி துவைப்பதும் நடக்கும். நாகரிக மாற்றம் என கூறி தெரு ஓரங்களில் அடிபம்பு அமைக்க பட்டது பஞ்சாயத்து சார்பில். அது வரை பொது உடமையாக இருந்த கிணறு அதன் பின்பு ஓவ்வரு வீட்டின் மதிலின் உள் அடைக்கலம் ஆனது.
அடுத்த நாகரிக மாற்றத்தில் அடிபம்புகள், தெரு குழாய்கள் ஆக மாறின. தினமும் காலையும், மலையும் தண்ணீர் வந்து மக்கள் மிகவும் சந்தோசமாக காணப்பட்டார்கள். சிறிது காலத்துக்கு பின்பு காலையில் மட்டும் தண்ணீர் வர துவங்கியது. பின்பு இரண்டு மணி நேரம், அடுத்து 1 மணி நேரம் என சுருங்கி இப்பொது தண்ணீர் வந்தாலும் அதை குடிக்க பயன் படுத்த முடியாத அவலநிலை.
கடந்த 7 வருடங்களாக குடிநீரும், AVM கால்வாயும் நம் கண்முன்னே அழிவை நோக்கி சென்றுகொண்டு இருகிறது. நாம் குடித்து, குளித்து குதூகலித்த நீரும் ஆறும் நம் அடுத்த தலைமுறைக்கு எட்டா கனியாகவே உள்ளது.
திருமண மண்டபங்களும், மேடைகளும் கட்ட காட்டும் முனைப்பு இயற்கையை வளங்களை பாதுகாக்க பங்கு பேரவையும்,பொதுமக்களும் காட்டுவது இல்லை.
அரசாங்கத்தையும்,அரசியல்வாதிகளையும் குறை கூறும் நம்மால் ஏன் சில லட்ச ருபாய் செலவு செய்து நம் ஊரை சார்ந்த மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க முடியாது. கடந்த 5/6 வருடங்களாக பூத்துறையில் கொடிகெட்டி பறக்கும் business தண்ணீர் business.
ஒரு சாதாரண குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு 3 முதல் 5 குடிதண்ணீர் கேன் தேவைப்படுகிறது, மாதத்திற்கு 12 முதல் 20 தண்ணீர் கேன். ஒரு குடிதண்ணீர் கேனின் விலை 40 ரூபாய் ஆக மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 480 முதல் 800 ரூபாய். ஒரு கணக்கிற்காக நமது ஊரில் 300 குடும்பங்கள் கேன் தண்ணீர் உபயோக படுத்துகிறார்கள் எனில் மாதத்திற்கு 144000 ரூபாய் (300 x 480) முதல் 240000 ரூபாய் (300 x 800).

2015-ம் வருடம் ஊர் சார்பாக இடம் வாங்கி கிணறு தோண்டப்பட்டது, அரசாங்க அதிகாரிகளின் கூற்றுபடி வேலை முடிந்தது. ஆனால் இந்நாள் வரை ஒரு துளி தண்ணீர் அதிலிருந்து பூத்துறைக்கு வந்து சேரவேயில்லை.
இப்போது புது பங்கு பேரவையின் முயற்சியால் கிணற்றை பரிசோதித்து பார்த்ததில், கிணற்றில் தண்ணீர் இல்லை. கடந்த 6 மாத காலமாக அரசு அதிகாரிகளை கேட்டால் கிணற்றை ஆழப்படுத்த வேண்டும் என கூறுகிறார்கள். பஞ்சாயத்து மற்றும் கலெக்டர் - ஐ கேட்டால் பணம் இல்லை என்கிறார்.

Bishop எதாவது சுற்று அறிக்கை அனுப்பிய உடன் சமூக வாரியாக வரி போட்டு, சமூக அளவில் போட்டியை உருவாக்கி(1 ம் சமூகம் 10000 , 5 ம் சமூகம் 5000) என பணம் பிரிக்கும் பங்குதந்தையர்கள் இயற்கையை காக்க 1% முனைப்பு காட்டி இருந்தால் இன்று நாம் இந்த அவல நிலைக்கு வந்து நின்றிருக்க மாட்டோம்.
விசாரித்து பார்த்த பொழுது கிணறை ஆழப்படுத்த 2 லட்ச ருபாய் தேவை படுகிறது. பூத்துறை வாழ் நல்லுள்ளங்கள் நினைத்தால் ஓரிரு மாதங்களில் கிணறை ஆழப்படுத்தி நம் மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க முடியும். நம்மால் முடிந்த பண உதவி செய்து நாம் இழந்த நல்ல குடிநீரை மீண்டும் பெறுவோம்.
மக்களே நம் மண்ணையும்,
நம் வளங்களையும் நாம் தான் காக்க முடியும்.
ஓன்று படுவோம்!!! வெற்றி அடைவோம்!!!