Saturday, 14 May 2022

Viknesh the real fighter!!!



Viknesh சிறு வயதில் அனைத்து சிறுவர்களை போல கால்பந்து விளையாடி திரிந்த சிறுவன்.ஆனால் அவனிடம் கால்பந்து வெறி மற்றும் சாதிக்கும் துடிப்பு இருந்தது. அவன் பயின்ற, பயஸ் XI பள்ளி கால்பந்து அணியில் இடம் பிடிப்பதும் தமிழக அணியில் பிடிப்பதும் ஓன்று, அந்த அளவிற்கு போட்டி இருக்கும்.

பள்ளி பருவ ஏமாற்றம்

9,10 வகுப்பில் படிக்கும்போது பள்ளி கால்பந்து அணி தேர்வில் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அணியில் இடம் கிடைக்கவில்லை.  அவனது கால்பந்து திறமையை கண்ட திரு. Jerry Bush, 2010 வருடம் திருநெல்வேலி மாவட்ட கால்பந்தாட்ட அணிக்காக மாநில அளவிலான போட்டியில் விளையாட அழைத்து சென்றார். அந்த போட்டியில் தனது அபார திறமையால் "Best Player Award" மற்றும் தமிழக அணியிலும் இடம் கிடைத்தது. ஆனால் சில பல காரணங்களால் Final list-ல் பெயர் இடம் பெறவில்லை. மாநில அணியில் இடம் கிடைத்தும்,  அடுத்த இரு வருடங்களில்(11 & 12) பள்ளி அணியில் இடம் கிடைக்கவில்லை.

கல்லூரி வாழ்க்கை

2013 பள்ளி படிப்பு முடித்தபின்பு, சென்னையில் பயின்றால் "Chennai League" விளையாடி "Professional Footballer" ஆகலாம் எனும் கனவுடன் மிகவும் புகழ்பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கால்பந்து trails க்கு சென்றும் Sports Quota admission கிடைக்கவில்லை. மிகவும் வருத்தத்துடன், தனது அண்ணன் விவேக் படிக்கும் J.J. College of Engineering and Technology trails க்கு சென்று Computer Science Department ல் sports Quota அட்மிஷன் கிடைத்தது.

கல்லூரி பயிற்சியாளர் மற்றும் Physical Director உதவியுடன் தனது விளையாட்டு திறமையை வளர்த்து, கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் தனது அணி வெற்றி பெற மிகவும் உறுதுணையாக இருந்தார். அதன் பயனாக, முதல் வருடத்திலேயே 2013 Anna University அணியில் இடம் கிடைத்தது. South Inter Zone University இடையிலான விளையாட்டு போட்டிகளில் முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறி All India University விளையாட Anna University தகுதி பெற்றது. தொடர்ந்து 3 வருடங்கள் அண்ணா University காக விளையாடி, அணியை All India University விளையாட தகுதி பெற வைத்தார்.

கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் அவனது விளையாட்டு திறமையை  கண்ட சென்னையை சேர்ந்த பல கல்லூரிகள் அவர்களது அணிக்காக விளையாட அழைத்தார்கள். அப்போதுதான் அவர்களுக்கு தெரியும் அவன் அவர்களது கல்லூரில் Trails-க்கு சென்றது.

கல்லூரி காலத்தில் local 7's மற்றும் காரைக்குடி 7's விளையாடி தனது திறமையை வளர்த்து கொண்டு வந்தார். அதன் பயனாக தனது கல்லூரி இறுதி ஆண்டில்(2017) AGORC அணிக்காக Chennai League விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இறுதி ஆண்டு தேர்வு காரணமாக ஒரு சில போட்டிகளே விளையாட முடிந்தது.

Local 7's ல் அவனது விளையாட்டு திறைமையை கண்டு வியந்த EP Thurai யை சார்ந்த Jegan.Jr(ICF Football Player & தமிழக Santosh Trophy Player) கேரளாவில் எழுவர் கால்பந்தாட்ட போட்டிக்கு அழைத்து சென்றார். Viknesh ன் கோலடிக்கும் திறைமையை கண்ட Prathiba Ullor அணி மேனேஜர் Mr. Unni அவர்கள் திருவனந்தபுரத்தில் தங்கும் இடமும், KSEB அணியில் விளையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்தார். Prathiba, Ullor அணியில் அந்த சீசனில் Joby Justin, Soosairaj விளையாடியது குறிப்பிடதக்கது.

KSEB வேலை 

2017 ல் KSEB கேரளாவில் நடந்த இந்திய அளவிலான போட்டியிலும் ஒரிசாவில் நடைபெற்ற இந்திய அளவிலான போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்றது. இதன் பயனாக 2018 ல் KSEB -ல் sports quota ல் வேலை கிடைத்தது. பிற மாநில கால்பந்தாட்ட வீரருக்கு கேரளாவில் வேலை வாய்ப்பு கிடைப்பது இதுவே முதல் முறை. மேலும் பூத்துறையிலிருந்து விளையாட்டு மூலமாக அரசு துறையில் வேலை கிடைப்பதும் இதுவே முதல் முறை.                                     

2019 மற்றும் 2020 ஆண்டு கேரள சந்தோஷ் trophy camp-ல் இடம் கிடைத்தது. ஆனால் இரு வருடங்களும் கடைசி 20 பேர் பட்டியலில் இடம் பிடிக்க முடியவில்லை. இது அவருக்கு மிகவும் மன உளைச்சலையும் அதே சமயம் விளையாட்டு மேல் உள்ள ஆர்வத்தையும் அதிகரித்தது. தனது பயிற்சியாளர் உதவியுடன் தனது திறமையை வளர்த்து கொண்டு 2021 KPL போட்டியில் மிக உற்சாகத்துடன் களம் இறங்கினர். 

kerala premier league

2021 KPL -ல் தவிர்க்க முடியாத காயத்தால் முதல் இரு போட்டிகளில் மட்டுமே பங்குகேற்க முடிந்தது. அதன் பிறகு அரைஇறுதி போட்டில் ஒரு கோல் அடித்து அணி இறுதி போட்டியில் முன்னேற செய்தார். இறுதி போட்டியில் gokulam kerala அணிக்கு எதிராக ஒரு கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். Gokulam அணி கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமநிலை பெற்றது. Extra Time ல் மேலும் ஒரு கோல் அடித்து கோகுலம் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Click here to watch KPL 2021 goals

Santosh Trophy

KPL 2022 - ல் தனது அபார கோல் அடிக்கும் திறமையால் KSEB அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார். 12 போட்டிகளில் விளையாடி 11 goals மற்றும் 4 assists. இதன் பயனாக KPL 2022-ல், player of  the tournament award மற்றும் Santhosh trophy இறுதிசுற்று போட்டிகளில் கேரளா அணிக்காக விளையாடும் வாய்ப்பும்  கிடைத்தது. 49 வருடங்களுக்கு பிறகு கேரளா santosh trophy அணியில் பிற மாநில வீரர் ஒருவர் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை. மேலும் தனது முதல் சந்தோஷ் trophy போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று தான் பிறந்த ஊருக்கும்,KSEB மற்றும் தமிழ் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.      

Click here to watch KPL 2022 goals and assists 

Friday, 17 April 2020

11.பங்கு மாற்றம்

ஆன்மீகத்தை இறைமக்களுக்கு 2 வருடம் போதிக்க ஆயரால் அனுப்பிவைக்கப்பட்ட பங்குத்தந்தை தனது கடைசி நாள் திருப்பலியில் பலிபீடத்தில் நின்று கொண்டு ஆற்றும் உரை "இறைமக்களே நான் உங்கள் பங்கிற்கு வரும்போது உங்கள் ஊர் மிகவும் பின்தங்கி இருந்தது. ஆனால் நான் உங்கள் ஊரில் பல முன்னேற்றத்தை கொண்டு வந்தேன் கோவில் கட்டினேன், மேடை கட்டினேன், குருசடி கட்டினேன், திருமண மண்டபம் கட்டினேன்..
கோவிலுக்கு வெளியில் இருந்து இரு இளைஞர்கள் பேசி கொண்டார்கள்,
"அளியா இது எல்லாம் இவரு இவருக்க வீட்டில் இருந்தா கொண்டு வந்து கட்டினாரு இல்ல பிஷப் ஹவுஸ்லிருந்து பணம் கொண்டு வந்தா கட்டினாரு? மொத்தம் நம்ம ஆளுவளுக்க பணம். எங்க அம்மா எனக்கு காலேஜ் பீஸ் கட்ட கடன் வாங்கினதுக்க கூட இதுக்கும் கடன் வாங்கி கொடுத்தது".
நான் குடுக்காண்டனு வெலெக்கினபோ,
"மோனே குடுக்காட்ட அன்பியத்துல ஏத்தாண்டாளுவ, கேவலமாட்டு சொல்லுவாளுவ, நமக்கு எதுக்கு மோனே வம்பு ஊரபோல நம்மளும் குடுக்குமோ. இல்லைனா நாளா அக்காளுக்க கல்யாணத்துக்கு வெல்ல பிரச்னையும் செய்யுவானுவ.
புதிய புதிய சாமி வந்த உடனே எத இடிக்கலாமான்னு தான் பாக்குதானுவ. இவனுவளுக்கு சாமியாட்டு படிச்சு குடுக்குதாரா இல்ல காண்ட்ராக்ட் க்கு படிச்சு குடுக்குதாரனே தெரியல. இவனுவளுக்கு ஊரில உள்ள வேற ஒரு பிரச்சனையும் கண்ணுல காணாது. கோவிலும், மேடையும், மண்டவுந்தான் கண்ணுல காணும்." இப்படி சலம்புண்டு இருந்தது அளியா.
உடனே அவன் நண்பன் கூறினான்.
அளியா அடுத்த சாமி மாறும்போ பாரு, அவரு இதே எடத்துல நின்னு சொல்லுவாரு, "இறைமக்களே நானும் நம் பங்கு பேரவை மற்றும் ஊர் பொதுமக்களும் சேர்ந்து செயல்பட்டதால்:
"1. நம் பங்கிலிருந்து பல குடும்பங்கள் நம் தாய் திருச்சபையை விட்டு வேறு பல சபைகளுக்கு சென்று கொண்டு இருந்தார்கள், அவர்களை நாம் நம் தாய் திருச்சபையோடு மீண்டும் சேர்த்து கொண்டோம்.
2. நம் ஊர் பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாக இருந்தார்கள்.அவர்களுக்கு நல்ல இறை போதனை கொடுத்து அதன் பிடியில் இருந்து மீட்டு எடுத்தோம்.
3. அனைத்து ஊர்மக்கள் பிரச்சனைக்கும் நீங்கள் காவல்நிலையம் சென்று கொண்டு இருந்தீர்கள். கடந்த 2 வருடங்களாக அனைத்து பிரச்சனைகளும் பங்குபேரவையில் பேசி முடிக்கப்பட்டது(no police case)
4. உங்கள் பிஞ்சு சிறார்கள் ஆங்கில வழி கல்வி பயில பல மைல்கள் சென்றார்கள். நமது பங்கில் KG1, KG2 வகுப்புகள் தொடங்க பட்டது.
5. உங்கள் ஊரில் நல்ல குடிநீர் இல்லாமல் மக்கள் சமத்துவபுரத்தில் ஆட்டோக்களில் சென்று குடிநீர் கொண்டு வந்தார்கள் அல்லது காசு கொடுத்து வாங்கினார்கள். இப்பொது பஞ்சாயத்தின் உதவியோடு நல்ல குடிநீர் தெரு குழாய்களில்வருகிறது.
6. தெரு குழாய்களில் தண்ணீர் வரவில்லை.

7. நம் பக்கத்து ஊர்களில் தூண்டில் வளைவு போட்டதின் காரணமாக நாம் ஆண்டுதோறும் பல வீடுகளை இழந்தோம்.. அரசு மற்றும் பிஷப் உதவியுடன் இரு இடங்களில் நாம் தூண்டில் வளைவு அமைத்தோம்.
8. உங்கள் ரோடுகள் மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இப்பொது அரசு உதவியுடன் நல்ல ரோடு போடப்பட்டது.
பங்குப்பேரவையும் ஊர் பொதுமக்களும் நினைத்தால் கண்டிப்பாக இதைவிட உங்கள் ஊரை முன்னுக்கு கொண்டு வர முடியும். நம்முடைய ஒவ்வொரு முடிவும் நம் பங்கு மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் இருக்க வேண்டும். இறைவன் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக" என தனது உரையை முடிப்பார் என கூறினான்.
அதற்கு அந்த நண்பன்
அளியா "இப்படி நடந்தா நம்ம ஒளிமாதாக்கு மொத மொழுவுதிரி நான் கொளுத்துவேன் அளியா".
ஆனா ஒரு டவுட் அளியா "இப்போ எல்லாம் சாமிமாரே போலீஸ் ஸ்டேஷன் போய் கேஸ் குடுக்குத்தாரு இதுக்கு பிஷப் ஒன்னும் சொல்லமாட்டாரா?.
உடு அளியா உடு, " அவுங்க மட்டும் மாலகன்மாரா, அவுங்களும் மனிசமாருதானே"

10. பங்குப்பேரவை எனும் பித்தலாட்டம்

துபாய்ல இருந்து ஒருவன், ஊரில் இருக்கும் அவன் நண்பனுக்கு போன் பண்ணினான்.
"நண்பா ஊருல என்ன விசேஷம்" னு கேட்டான். அதற்கு அவன் நண்பன்.
"அளியா இண்ணு கோவில புதிய கமிட்டி அளுவ பொறுப்பு எடுத்தாரு. போன கமிட்டி சரியில்ல, சாமி சரியில்லனு சொல்லிட்டு நடந்த 10 ஆளும் புதிய கமிட்டில எறியாச்சு, இனியும் நம்ம ஊருல எல்லாம் நல்ல காரியம்தான் நடக்கும். ஏன் எண்ணா ஊருல நடக்குதா எல்லா காரியமும் கமிட்டி கூடிதான் தீர்மானம் எடுக்குமாம். அப்போ சாமியாரு எதாவது தப்பான விசயம் கொண்டு வந்தா கமிட்டி தடுத்து மக்களுக்கு கெட்டது நடக்காத பாப்பாங்க"
"நண்பா புது கமிட்டி ஆளுவளுக்க பேர கொஞ்சம் சொல்லு" என நம்ம துபாய் ஆளு கேட்டான்.
அதற்கு நண்பன், "அளியா, எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஆளுவதான்" என லிஸ்ட்டை சொல்ல தொடங்கினான்.
" 1 வார்டு .., 2 வார்டு .., 3 வார்டு ..,4 வார்டு ..,5 வார்டு ..,6 வார்டு ..,7 வார்டு ..,8 வார்டு ..,9 வார்டு ..,10 வார்டு .."
நண்பா "சூப்பர் கமிட்டி, எடப்பாடு தொட்டு அந்தோணியார் குரசடி வர உள்ள ஸ்டராங் & எனெர்ஜிடிக் ஆளுவ. இனி நம்ம ஊரு துபாய போல மினுங்கும் நண்பா"
அதற்கு ஊரில் இருக்கும் நண்பன் இடை மறித்து, "அளியா, இன்னும் லிஸ்ட் இருக்கு சொல்லுதேன் கேளு..
இன்னும் என்ன லிஸ்ட் நண்பா, "நம்ம ஊருல மொத்தம் 10 வார்டு. நீ, வார்டு 10 லணு நம்ம மக்கள் தேர்ந்து எடுத்த 10 கமிட்டி ஆளுவளுக்க பெரும் சொல்லி ஆச்சு. வேற என்ன லிஸ்ட் நண்பா"
இப்போதான் ஊரில் இருக்கும் நண்பன் பெரிய குண்ட தூக்கி போட்டான்."அளியா,கமிட்டி ஆளுவ மொத்தம் 20 "
என்னத்த சொல்லுத நண்பா " ஒவ்வரு வார்டு லேனும் அப்போ 2 கமிட்டி யா?"
இல்லை அளியா, "அப்போ மீதி 10 கமிட்டி ஆளுவளும் எங்கேணு ?"
சொல்லுதேன் கேளு அளியா, என லிஸ்ட்டை சொன்னான் அளியன்:-
"11. சாமிக்க ஆளு (Father nominee)
12. சாமிக்க ஆளு (Father nominee)
13. கான்வெட் சிஸ்டர்
14. fisherman
15. youth
16. Education
17. TSS
18. BCC
19. Family
20. அஜபாலனம்"

நண்பா,
"சாமி என்னத்துக்கு 2 ஆளுவள செலக்ட் பண்ணுதாரு?"
"சிஸ்டர்ஸ் என்னத்துக்கு ஊர் கமிட்டி ல"
"அப்போ நம்ம செலக்ட் பண்ணின கமிட்டி ல fisherman/family லனு யாரும் இல்லையா" - என நம்ம துபாய் ஆளு கேள்வியாட்டே கேட்டான்.
அதுக்கு ஊரில் இருக்கும் நண்பன்."அளியா, நீ கேக்குத எல்லாம் நாயந்தான். நம்ம தலைமை பிஷப், அப்படி சட்டம் வச்சு இருக்குதாரு நம்ம என்ன பண்ண முடியும்".
நண்பா, "அப்போ நம்ம எந்த கமிட்டி ஆளுவள எடுத்து உட்டாலும், நம்ம ஊர ஒண்ணும் மாத்த முடியாது. என்னண்ணா, ஒரு கமிட்டி கூட்டத்துல மக்கள் சார்பாட்டு நம்ம எடுத்து உட்ட 10 பேருல 8 பெரு கடல்ல தொழில கெடக்குவாரு மீதி உள்ள 2 பேரும்தான் போவாங்க, ஆனா வேற 10 கமிட்டி இருக்குதாரே அவங்க 8 பெரு கண்டிப்பா எல்லா கூட்டத்துக்கும் போவாரு. ஒரு டிஸ்கஷன் வந்து மெஜாரிட்டி பாக்கும்போ, சாமி சொல்லுததுதான் கடைசி முடிவு ஆகும். என்னண்ணா, வேற 10 கமிட்டி ஆளுவள்ல 8 பெரு பெண்ணுங்கதான் இருப்பாங்க. அவங்க சாமி சொல்லுததுதான் கரெக்ட்னு கண்ண மூடிட்டு நம்புவாங்க"
இந்த முறையை மாற்றவில்லையெனில் அடுத்த 50 வருடம் ஆனாலும் நம்மை இவர்கள் அடிமைகளாக தான் நடத்துவார்கள். ஏனெனில் அவர்கள் அப்படிதான்.

9. பள்ளி வாழ்க்கை


பூத்துறை காருண்ணியபுரம் பள்ளிகூடத்தில் 2 முதல் 8 வரை படித்து விட்டு பயஸ்.XI மேல்நிலை பள்ளி தூத்தூரில் நுழைகிறான் ரமேஷ். பூத்துறை பள்ளிக்கூடம் என்பது அவனது வீடு போல, ஏனெனில் வகுப்பறை மற்றும் பள்ளிகூடத்தில் 99% மாணவர்களுமே பூத்துறையை சார்ந்தவர்கள்.பள்ளி முடிந்த பின்னும் அவனது வாழ்க்கை என்பது அவர்களை சுற்றியதுதான்.
ஆனால் போகும் பயஸ் XI பள்ளி என்பது 5 ஊர் மக்களும் பயிலும் பொதுவான பள்ளி. மேலும் அவனது சில தூத்தூரில் படிக்கும் நண்பர்கள் பயஸ்.XI பள்ளியின் நிறை, குறைகளை அவ்வப்போது கூறியது அவனது நினைவலையில் அசைபோட்டு சென்றது. பெரிய விளையாட்டு திடல், நல்ல கால்பந்து கைப்பந்து அணிகள், ஆங்கில ஆசிரியரின் பிரம்பு, கணக்கு ஆசிரியரின் நுள்ளு, தமிழ் ஆசிரியரின் தூக்கம் மேலும் கதாநாயகர்களாக வலம்வரும் சில பூத்துறை மாணவர்கள், கடைசியாக பக்கத்து ஊர்களில் உள்ள சில கதாநாயகிகள்.
இவை அனைத்தையும் மனதில் சுமந்து கொண்டு முதல் நாள் பள்ளியில் நுழைகிறான். அறிவிப்பு பலகையில் ஓட்ட பட்ட அவனது வகுப்பு மாணவ மாணவிகள் பெயர்களை படித்து கொண்டு இருக்கும்போதே, "அப்பாடா, தெரிஞ்ச நாலு அஞ்சு ஆளு உண்டு கிளாசில" என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான் ரமேஷ்.
உடனே நண்பன் ஆஸ்டினை தேடி அவனது வகுப்பில் விருவிரு என செல்கிறான்.
ரமேஷ் வருவதை பார்த்த ஆஸ்டின் உடனே வகுப்பறையை விட்டு வெளியில் வந்து "வா கும்பாரி நீ எந்த கிளாஸ்"
"நண்பா நான் உனக்க கிளாஸ் தான் D" என ரமேஷ் சொன்னான்.
ஆஸ்டின் "நண்பா பாத்து, சில பெண் பைங்க உண்டு எதாவது சொல்லி ஓடக்கினா ஒடனே டீச்சர்ட சொல்லி குடுக்கும். அதும் நீ இப்போதான் பள்ளிக்கூடத்துல சேந்த கொஞ்சம் பாத்து இரி"
"நண்பா, நான் இருக்குத இடம் தெரியாத இருக்குத ஆளு, எனக்கட்ட போய் நீ இப்படி சொல்லுத. அப்படி எதாவது நடந்த நீ பாத்துக்க மாட்டிய நண்பா" என ரமேஷ் இழுத்தான்.
"ஓகே நண்பா, வா கிளாஸ்சுக்க உள்ள. எனக்க டெஸ்க் ல இடம் இல்ல. நீ இப்போ பெறக்க போய் இரு. டீச்சர் வந்தா செலப்போ எல்லாரையும் மாத்தி இருத்தும். அப்போ பாக்கலாம்"
ரமேஷ் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தான். அதுவே அந்த வருடம் முழுவதும் அவனது இருப்பிடம் ஆனது.
பள்ளிநாட்களில் அனைத்து மாணவர்களும் நடந்தே செல்வார்கள், அதை பார்க்கும் போது பச்சை வெள்ளை நிறத்தில் ஊரே ஊர்வலம் செல்வதை போல இருக்கும்.பள்ளிக்கு அனைத்து புத்தகங்களையும் தோள்மேல் வைத்து சுமந்து செல்வதுதான் வழக்கம். அதனால் சில நாள்களில் சுமை குறைப்பதற்காக தமிழ் அல்லது ஆங்கில பாட புத்தகத்தை கொண்டு செல்லாமல் பக்கத்துக்கு வகுப்பு நண்பன் டெல்பினிடம் வாங்கும் பழக்கம் உண்டு. ஒரு நாள் இவ்வாறு தமிழ் பாட புத்தகம் கேட்பதற்கு பக்கத்து வகுப்பு டெல்பினை பார்க்க சென்றால் அவன் அன்று வகுப்பிற்கு வரவில்லை. யாரிடம் கேக்கலாம் என நினைத்து கொண்டு நிக்கும் போது டெல்பினின் வகுப்பு இரு மாணவிகள் வகுப்புக்குள் நுழைந்து கொண்டு இருந்தார்கள்.
அவர்களிடம் மிக தகதகத்த குரலோடு "தமிழ் புக்கு தருவீரா" என ரமேஷ் கேட்டான்.
சற்று நேரத்தில் இருவரில் ஒரு மாணவி தமிழ் புத்தகத்தை கொண்டு வந்து நீட்டினாள். ரமேஷ் ஒன்றும் கூறாமல் வாங்கிவிட்டு நேராக அவனது வகுப்பறையில் நுழைந்தான்.புத்தகத்தை திறந்த போதுதான் அவளது பெயரை பார்த்தான். மிக அழகான கையெழுத்தில் "கலா" என எழுதி இருந்தது.
பெயரை பார்த்த ஆஸ்டின் "என்ன நண்பா புக் எல்லாம் வாங்கி இருக்க ம்ம் ம்ம்".
தமிழ் வகுப்பு முடியும் முன்னே இந்த செய்தி ரமேஷ் நட்பு வட்டாரத்தில் பரவி விட்டது. ரமேஷ் மதிய உணவு வேளையில் புத்தகத்தை கொண்டு குடுத்து "தேங்க் யூ" என கூறி விடை பெறும்போது அவனது நண்பன் ஜோஸ் பார்த்து விட்டான். ஜோஸும் அவனது பங்கிற்கு "நண்பா ம் ம்" என சொல்லி சென்றான். இதை கேட்ட கலா முகத்தை மிக இறுக்கமாக வைத்து விட்டு வகுப்பறைக்குள் நுழைந்தாள்.
அவளது தோழிகள் "நாங்க அப்பவே சொன்னோம் புக்கு குடுக்காதேன்னு, நீ கேட்டாயா? இது மட்டும் போதும் இந்த பைன்களுக்கு இனியும் நடக்க உடமாட்டானுவ"
இதன் பின்பு கலா ரமேஷை பார்க்கும் போது ஒரு கோபம் கலந்த பார்வை வீசி செல்லுவாள். ரமேஷ் நண்பர்கள் எப்போது கலாவை பார்த்தாலும் "ரமேஷ், ரமேஷ்" என கூறி அவளது கோபத்தை மேலும் ஏற்றி விடுவார்கள்.10 வகுப்பு வரை முழுவதும் இவ்வாறு "ரமேஷ், ரமேஷ் ம்ம் ம்ம்" என கடந்து சென்றது.
10 வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் ரமேஷின் நண்பன் ஜோஸ் அவன் மாமா சொன்னதற்காக சிவில் பாடப்பிரிவில் சேர்ந்தான்.
ஜோஸ் அவனது நண்பர்களிடம் "சிவில் பாடத்தில் கணக்கு மட்டும் படிச்சா போதும். வேற பாடம் தமிழ்,இங்கிலிஷ், சிவில் அதுல சிவில் பேப்பர் திருத்த நம்ம டீச்சர் தான் போகும் அதனால யாரையும் தோத்து விடாதாம்". இதை அறிந்த ரமேஷும் அவனது நண்பர்கள் 7 பெரும் சிவில் பாடத்திட்டத்தில் சேர்ந்தார்கள்.
வகுப்புகள் ஆரம்பித்து சில நாள்கள் கழித்து மீண்டும் கலாவை பார்த்தான் ரமேஷ். இப்போது அவள் வெறும் புன்னகையை மட்டும் வீசி சென்றாள். ரமேஷுக்கு என்ன நடக்குது என்றே புரியவில்லை. பொதுவாக முறைத்து பார்ப்பவள் இப்போது ஏன் புன்னகைத்து செல்கிறாள் என. ரமேஷ் மனதில் "கண்ணா லட்டு தின்ன அசையா" விளம்பரம் ஓடி சென்றது.

Sunday, 5 January 2020

7.மயில் வாகனம்


ரமேஷும், ஜான்சியும் தங்களது பிள்ளைகளுக்கு கிறிஸ்துமசுக்கு துணி எடுக்க scooty ல் மார்த்தாண்டம் செல்ல முடிவு எடுத்தார்கள். நம்ம 
ரமேஷுக்கு வயசு 40 இருக்கும், அனா இதுவரை சொந்தமா ஒரு சைக்கிள் கூட இல்லை. இந்த scooty கூட ஜான்சியின் தம்பியின் scooty தான்.
 
நம்ம ஆளு இருக்குதது தான் துபாய்ல ஆனா ஊருல இதுவரை சொந்தமா ஒரு சைக்கிள் கூட இல்லை. ஊருக்கு எப்போ வந்தாலும் இந்த Scooty தான் ரமேஷ் குடும்பத்துக்கு மயில் வாகனம்.
 
இரு பிள்ளைகளையும் ரமேஷின் அம்மா வீட்டில் விட்டுவிட்டு 11:30 மணிக்கு அவர்களது மயில் வாகனம் மார்த்தாண்டத்தை நோக்கி புறப்பட தயாரானது. வீட்டின் உள்ளிருந்து "அண்ணா,அண்ணா நில்லுங்க!! இப்போ நம்ம ஏரியால பயங்கர செக்கப்பு, இந்த ஹெல்மட்டை தலைல வையுங்க" என ரமேஷின் பாசமலர் தங்கை நீட்டினாள்.
 
"வே ஏறுனயா" என பின்னாடி நின்ற மனைவி ஜான்சியிடம் scooty கண்ணாடியை பார்த்து கொண்டே கேட்டான் ரமேஷ்.
 
"நில்லுங்க! ஏய் ஏறுதேன்" என ஜான்சி சொல்லி கொண்டே ஏறி அமர்ந்தாள்.
 
ஜான்சி மக்களை பார்த்து, "மக்களே! பாட்டி, தாத்தாவை தொந்தரவு செய்யாதேங்க. அத்தை சாப்பாடு தரும் ஒழுங்கா சாப்பிடணும். நாங்க ஒடனே வருவோம் என்ன" என கூறி புறப்பட தயாரானார்கள்.
 
"லேய் மோனே! எனக்க மோள, பாத்து கொண்டு போப்பா" என ரமேஷின் அம்மா மதில் கதவை பூட்டியவாறே சொன்னது.
 
"பாரடா!, பெத்து வளத்தின மோன விட இடைல வந்தவளுக்க மேல உள்ள பாசத்த" என ரமேஷ் தனது தங்கச்சியை பாத்து சொன்னான்.  
 
"கல்யாணம் தீந்து வருசம் 10 ஆச்சு, இப்பளும் புது ஜோடிய போல மக்கள இட்டுண்டு கறக்கம்" என ரமேஷின் தம்பி மனைவி அவளுக்க பங்குக்கும் போட்டு வைத்தாள்.
 
வண்டி காஞ்சம்புறம் தாண்டி சென்றதும் "ஏய், கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க, நான் ஷால எடுத்து மோகத்த மூடுதேன், பயங்கர தூசு" என ஜான்சி சொல்லி கொண்டே முகத்தை மூடினாள்.
 
அரை மணி நேர பயணதிற்கு பின் வெட்டுமணியை அடைந்தார்கள்.
 
"ஏய், இங்கு பாருங்க இப்போ பொடி ஒன்னும் இல்லை, பால வேலை முடிஞ்சனு தோணுது" என ஜான்சி கூறினாள்.
 
"ஆ!!! பால வேல முடிஞ்ச போட்டோ எல்லாம் facebook-ல ரண்டு மூணு மாசத்துக்கு முன்னே நான் பாத்தேன். இந்த ரூட்ல வந்ததால பாலத்தில எற முடியாதனு நெனைக்குதேன். திரும்பி போகும் போது பாலத்தில கூடி போகலாம்" என ரமேஷ் கூறினான்.
 
பாலத்தின் அடியில் மயில் வாகனத்தை நிறுத்து விட்டு நல்லா சில்க்ஸ்-ல் சென்றார்கள். தரைத்தளதில் நின்ற மேற்பார்வையாளர், இருவரையும் வரவேற்று
 
"மேடத்துக்கா துணி சார்"
 
"இல்ல குழந்தைகளுக்கு"
 
சார இரண்டாவது தளத்திற்கு கூட்டிட்டு போமா என கடையில் நின்ற சக பணியாளாரிடம் மேற்பார்வையாளர் கூறினார்.
 
இருவரும் லிப்ட்டில் ஏறி மேல்தளத்திற்கு சென்றார்கள். சிறிது நேர தேடலுக்கு பிறகு ஒன்றும் பிடிக்காமல் நாகர்கோயில் செல்ல தீர்மானித்து கடையில் இருந்து இறங்கினார்கள்.
 
மயில் வாகனம் மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட தயாரானது.
 
"ஏ, நாகர்கோயில் வர வண்டி ஓட்டுவீரா?" என ரமேஷ பார்த்து ஜான்சி கேட்டாள்.
 
"வேய், ஏறு. இல்லைனா நீ பஸ்ல வா" என ரமேஷ் கூறினான்.
 
"ஏ! இல்ல, இந்த 10 வருஷத்துல இதுவர பைக் ல நம்ம இத்துற தூரம் போனது இல்ல, அதுதான்" என இழுத்தாள் ஜான்சி.
 
"வேய், பேச்ச கோற.
ஏறு! ஏறு! ஏறு!.
மழை வறத போல இருக்கு"
 
"ஏ!அந்த ஹெல்மட்ட எடுத்து போடுங்க"
 
"ஓகே மா ஓகே!!!, மாமியாருக்க மருமோளே ஏறு"
 
ஜான்சி ஏறி அமர்ந்தாள் வண்டி சீறி பாய்ந்தது நாகர்கோவில் நோக்கி.

(சீறி பாய்ந்தது என சொன்னா நம்பவா போறீங்க. எதுக்கும் கெடக்கட்டு)
 
--தொடரும்

#poothurai

6.சைக்கிள்


சைக்கிள்
==============
8 ம் கிளாசு பள்ளி லீவுல 4 கும்பாரிமாரு காஞ்சாம்புறத்தில போய் வாடகை சைக்கிளு எடுத்து வந்தானுவ, ஓட்டி பளவ. ஆளுக்கு ஒரு றவுண்டு எடப்பாடு(பூத்துறை எடப்பாடு) றோட்டில இருந்து கடப்பறம் வர உள்ள தொளி ரோட்டில. அப்ப எங்க வீடு எடப்பாடுல உள்ள காலனி வீடு. இந்த காலனிதான் பூத்துறைல அரசாங்கம் கெட்டி குடுத்த மொத டெறஸ் போட்ட காலனி. எனக்கு அதுவர சைக்கிளில பெறக்க ஏறயே பேடி. அண்ணுதான் முதல் முதலாட்டு சைக்கிளில ஏத்தி இருத்தி ரெண்டு சைடுல ரெண்டு ஆளு, பெறக்க ஒரு ஆளு புடிச்சு சைக்கிள ஒரு ஆட்டோ போல மாத்தினானுவ. 

எனக்க மனசு புள்ளா, ரெண்டு காலையும் தறைல இருந்து பெடல்ல வச்சா கண்டிப்பா தரைல விளுந்து எடுக்கும் பாரம் கிட்டும். இவனுவ 3 பேரும் கண்டிப்பா பாதில வுடுவானுவ ணு பேடிச்சே ஓட்ட தொடங்கினேன். 

பெறக்கேணு "லே மகேசு இடுப்ப வளச்சாத, இனியும் வளஞ்சது குறுக்குல ஒண்ணு கிட்டும் பாரு" என பேடி காட்டுனான்.

முன்ன புடிச்சிட்டு வந்தவனுவ "லே நேரே பாத்து ஓட்டு" னு சவுண்டு குடுத்தானுவ. நான் நேரே தலைய எளுப்பி பாத்த எங்க அப்பா மடிவளச்சிண்டு குளிச்ச போவ அந்த ரோட்டுல வாறு. 

சைக்கிளுக்க கிட்ட வந்த உடன,"ஓட்டுனது போதும் வீட்டில போ" என விரட்டி விட்டது. அதுக்க பிறவு வீட்டில ஒரு பெரிய பஞ்சாயத்தே நடந்தது. பஞ்சாயத்து தீர்ப்பு "இனி சைக்கிள் பளவ கூடாது".
அதுக்க பலன் இன்னு வர ஒளுங்கா சைக்கிள் ஓட்ட தெரியாது. இப்ப வர ஊருல சொந்தமா சைக்கிளோ, பைக்கோ வாங்கினதும் இல்ல, சின்ன வயசில யாரும் வாங்கி தந்ததும் இல்ல.

ஆனா எனக்க மக 4 வயசில சைக்கிள் வேங்கி கேட்டு வேங்கி குடுத்தேன். கடைசியா ஊருக்கு போனப்ப அப்பாட்ட சைக்கிள் கதைய கேட்டதுக்கு சிரிச்சிட்டே "அப்படி வளத்துனதனால தானே இப்போ நீ இப்படி இருக்குத"

"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு போல 🤩🤩🤩"

5.பாரன் சம்பாத்தியம்

பாரன் சம்பாத்தியம்
=======//================//
 
"லே புள்ள சந்தோசு, எண்ணப்பா வந்த? நல்லா இருக்குதயாப்பா?" என கனத்த குரலில் அந்தோணி கேட்டது. 
 
நல்லா இருக்குதேன் ஏய். நீங்க நல்ல இருக்குதீரா?
 
"நல்லா இருக்குதேன். என்னப்பா இந்த சின்ன வயசுல முடி எல்லாம் நரைச்சு போச்சு. உங்க அப்பன் இப்பவும் எளந்தாரிய போல நடக்குதான்." அந்தோணி நக்கலா ஒரு கேள்வி கேட்டது சந்தோச பார்த்து. எல்லாரும் மனசுல நினைக்குதத, அந்தோணி சந்தோசுக்க முகத்துக்கு நேரே கேட்டது.    

"ஏ அந்தோணி ஆளே, பாரன்ல போனா அரபிமாரு கை நெறய சம்பளம் தருவாங்க. மேலும் அந்த நாடு நம்ம கேக்காமலே இன்னொன்னும் தரும். அது ஒவ்வொரு ஆளையும் பொறுத்தது, சில பேருக்கு தொப்பை, சில பேருக்கு கசண்டி, என்ன போல சிலருக்கு வெள்ள முடி. என்ன பண்ண ஏய், அடுத்த தடவ வரும்போது நல்ல கருப்பு டை அடிச்சிட்டு வாரேன்." என சொல்லி சந்தோசு சிரித்தான்
 
"வேற என்னப்பா விசேஷம், மக்க எப்படி! நல்லா இருக்குதாப்பா"
 
"நல்லா இருக்குதாரு"
 
புள்ள, அரபிமாரு படிக்குத ஸ்கூல்லயா உனக்க மக்க படிக்குது. மடிவளச்ச எடத்துல உங்க அப்பன், மிக்கேலுட்ட சொல்லுண்டு இருந்தான். "அடுத்த மாசம் மக்களுக்கு ஸ்கூல் லீவு, அப்ப மோனும் மக்களும் வருவான்ங்கனு" அதுதான் கேட்டேன்.
 
இல்ல ஏ. நம்ம இங்க உள்ள ஸ்கூல்ல போலத்தான் அங்கயும். இங்க உள்ள புக்கு எல்லாம் தான் அங்கும் வரும். பின்ன எஸ்ட்ராவா அரபி, ஹிந்தி எல்லாம் படிச்சுகுடுப்பாங்க.
 
அந்தோணி மிகவும் ஆச்சரியத்தோடு,
 
"புள்ள தமிழா!!!"
தமிழ்நாட்டுல நிறைய பள்ளிக்கூடத்துல தமிழ் சொல்லி குடுக்கலயாம். அங்கு தமிழ் சொல்லி குடுக்குதாராக்கும்? சும்மா இல்ல பண்டு உள்ளவன் சொன்னான் "முற்றத்து முல்லைக்கு மணம் இல்லைனு".
 
"ரெண்டு மக்களும் பள்ளிக்கூடத்துல போகேது புள்ள" என அந்தோணி அடுத்து கேட்டார். 
  
"ஆ. ஏ போகுது."
 
"எதாவது சொத்து சேக்க வேண்டிய காலத்தில, கிட்டுத பைசாய அங்கே செலுவு செஞ்சு தீத்தா எப்படியப்பா?" என சந்தோசின் பேரில் உள்ள அக்கரையில் அந்தோணி எதேச்சையா கேட்டது.
 
கடந்த ஒரு மாதத்தில் பலமுறை பலரால் சந்தோசின் முன் எழுப்பப்பட்ட கேள்வி. சந்தோசும் ஒரு நமட்டு சிரி சிரித்து விட்டு எல்லாருட்டையும் சொல்லுதத போல "வாறத போல பாக்கணும் வேற என்னேயே...ஏ" எனகடந்து செல்ல முயன்றான்.
 
ஆனால் அந்தோணி உடுத பாடு இல்ல "புள்ள இப்படி சொன்னா எப்படி நீங்க கொஞ்சம் படிச்சவங்க, உங்க அப்பன் நீங்க கடலுல போய் கஸ்ட பட கூடாதனு உங்கள படிச்ச வச்சான். நீங்க நாலு காசு சேத்து வைக்குதத விட்டுட்டு, பெறவு எங்கள போல வயசு ஆனாலா சேக்குவி?"
 
"ஏ, சொத்து சேர்ப்பதும், பணம் சேர்ப்பதும் தேவைதான். ஆனால் அதை விட ரொம்ப ரொம்ப முக்கியமான தேவை நம் மக்க. பணமும் சொத்தும் சேர்க்க ஓடும் ஓடத்தில் மக்கள வளக்க தவறினால்? நம் தலைமுறையே ஆட்டம் கண்டு விடும். உங்களுக்கே தெரியும், சின்ன வயசுல நான் ஒரு தப்பு செஞ்சா எங்க அப்பா ஓட ஓட விட்டு அடிக்கும். ஆனா இப்போ எனக்க மோன கோவத்துல திட்டுனாலே என்னைய போட்டு பறையுது, எங்க அம்ம ஒரு மூலைல போய் "அங்கும் இவன் மக்களை இப்படியான் போட்டு அடிச்சுவான் போலைனு" கெடந்து ஒப்பாரிவச்சுது. மக்க ஊருல இருந்தா இவுங்க செல்லம் குடுத்தே பளாக்குவாங்க" 
 
அந்தோணி ஆளே! வாழ்க்கைல ஒரு சின்னஆசைதான் எனக்கு, "என்னய எங்க அப்பா வளத்தினது போல, எனக்க மக்கள நான் வளத்தணும் அத்திறையும்தான். வேறே சொத்து, பணமனு ஒரு எண்ணமே இல்ல"
 
"ஏ, நம்ம ஊருலேணு பரான்ல இருந்து உள்ள இடத்தை எல்லாம் வாங்கி போட்ட பாரான் ஜான்சனுக்க நிலைமைய பாத்தீரே, சொந்த மக்களே சொத்துக்கு வேண்டி அந்த ஆள பாக்காத இட்டு கடைசில இந்த சின்ன வயசிலேயே அந்த ஆளு செத்தது. செத்தனு சொல்லுதத விட கொன்னானுவ. இப்போ அந்த புள்ளவ நடக்குத நடைய பக்குதீரே நீங்க?" என சந்தோசு நிறுத்தாமல் அடுக்கி கொண்டே போனான்.  
 
அந்தோணி குறுக்கிட்டு, "புள்ள நீ சொல்லுதது எல்லாம் சரிதான். திடீர்னு பரான்ல இருந்து ஊருக்கு திரும்பி வந்தா என்னப்பா பண்ணுவீ? நாலு காசுஇருந்தாதானே ஊருல எதாவது தொழிலு செஞ்சு பிளைச்ச முடியும்".
 
இப்பளே மக்க ஊருல ஸ்கூல்ல போறம்னு சொல்ல தொடங்கிச்சு. மக்க கொஞ்சம் கூட வளந்து நாங்க ஊருல நிக்குதோமனு சொன்ன, நமக்கு என்னசொல்ல முடியும் ஏ? அது வர இப்படியே போட்டு.   
 
"ஏ வேற ஒண்ணும் இல்லைனா, ஊருல ஒரு பெட்டி கடைய போட்டு உள்ளத வச்சு பொழைச்ச வேண்டியதுதான்." சொல்லி சந்தோசு சிரித்தான்.
 
"அடுத்து எப்போம் உங்க அப்பன அங்கு கொண்டு போறீ?" என அந்தோணி கேட்டது.
          
அந்தோணி ஆளே, அவுங்க லாஸ்டா அங்கு வந்தப்ப அவுங்கள பாக்க சங்கடமாட்டு இருந்தது. ஊருல பறவைய போல பறக்குதவங்கள சும்மா வீட்டுல அடைஞ்சு போட்டத போல இருக்கும்.
 
வந்து ஒரு வரம் கழிஞ்சு காலைல மக்கள ஸ்கூல் வண்டில ஏத்தி விட்டிட்டு வாக்கிங் போவாங்க. பிறவு ஒரு 10 மணி போல அப்பா பக்கத்துல உள்ள முடிவெட்டுத கடைல போய் தமிழ் பேப்பர் படிக்கும்.  
 
ஒரு நாளு வேல தீந்து வந்தப்ப சின்ன கார மீனு பொரிச்சு வச்சு இருந்தது.
 
நான் கேட்டேன், "இந்த மீனு எங்கைனு கெடச்சது?"     
 
எனக்க பொண்டாட்டி சொன்னா "அப்பா மடிவளச்ச போய் கொண்டு வந்தது" என சொல்லி சிரிச்சா.
 
அப்பாட்ட கேட்டப்ப,"மோனே, நேத்து நடக்க போறே எடத்துல தும்பு எறிஞ்சாங்க. அதுல ஒரு தமிழ் ஆளு நான் வேஷ்டி உடுத்துண்டு போறத பாத்து, அண்ணா நீங்க தமிழ்நாடா?" என கேட்டது
 
நான் ஆமா என சொன்னேன், உடனே "நல்ல மீனு இருக்கு கொண்டு போறீரா?"    
 
"தம்பி பைசா கொண்டு வரல நாள வாங்குதேன்"
 
அதுக்கு அவரு, "இத கொண்டு போங்க, பைசா நாள தந்தா மதினு சொல்லி கைல தந்தது." நாள பைசா கொண்டு குடுக்கணும்.
 
நான் சொன்னேன், "அந்த அளுக்க கூட அப்படியே தொழிலுக்கு போவாட்டி?"  
 
அம்மா சிரிச்சிட்டே, "மோன அது எல்லாம் விசாரிச்சாச்சு அய்யாளு, செல்லப்ப நாள போனாலும் போகும்"
   
அந்தோணி உடனே "அவன் அங்கு வந்தும் கடப்புறத்தில போறத நிறுத்தல அப்போ?"
 
அந்தோணி ஆளே "கடலும் கடப்புறமும் அய்யாளுக்க உசிரு. இப்பழும் நெறய பெரு,
 
"லே சந்தோசு , உங்க அப்பன வீட்டுல இருத்தி சாப்பாடு போட வேண்டியது தானே? இப்பழும் அவன என்னத்துக்கு கடலுல உடுதி" என கேக்குவாரு.
 
ஐயாளு இப்பளும் கடலுல போறதினாலதான் ஆசுவுத்திரி பக்கம் போகல. இல்லைனா உங்கள போல ஐயாளும் பிரசுரும், சுகரும் மாட்டு  இப்போ மாத்திரயும் அசுவுத்திரியுமா அலைய பாத்தது.             
 
ஓகே "லீவு நெறய நாளு உண்டாப்பா?" 
 
"ஒரு மாசம் உண்டு ஏ"  
 
"அப்ப பாக்கலாம் புள்ள" என கூறி இரண்டு பெரும்விடை பெற்றார்கள்.