எனதருமை நண்பர்கள்
Name Living @
1.Albert UAE2.Borjan UAE
3.Finion UAE
4..Golbin UAE
5.JohnAlex UAE
6.Joy UAE
7.Mahesh UAE
8.Ouseph UAE
9.Shibu UAE
10.Biju UAE
11.Jose UAE
2.Augustin Saudi
3.Binu Mumbai5.Cleetus Poothurai12.Justin Nigeria
14.Mariajohn Poothurai
15.Melbin Mumbai
16.Nelson Qatar
18.RaviKumar Poothurai
20.Spirjin Poothurai
20.Stylook Poothurai
21.Tony Qatar
பி றப்பிடம் : பூத்துறை
எமது வாழ்க்கைமுறை
பள்ளி பருவத்தில் மறக்காமல் இருக்க நினைப்பது...
வகுப்பு 1-3
வகுப்பு 9-12
இளமை தந்த நினைவுகள்...
Name Living @
1.Albert UAE2.Borjan UAE
3.Finion UAE
4..Golbin UAE
5.JohnAlex UAE
6.Joy UAE
7.Mahesh UAE
8.Ouseph UAE
9.Shibu UAE
10.Biju UAE
11.Jose UAE
2.Augustin Saudi
3.Binu Mumbai5.Cleetus Poothurai12.Justin Nigeria
14.Mariajohn Poothurai
15.Melbin Mumbai
16.Nelson Qatar
18.RaviKumar Poothurai
20.Spirjin Poothurai
20.Stylook Poothurai
21.Tony Qatar
பி றப்பிடம் : பூத்துறை
சாதி
மத பேதமின்றி நிமிர்ந்து நிற்கும் நகரம், இல்லை அரசியல் கூத்துபடி
கிராமம் அதுவும் குக்கிராமம்(அரசியல் வாதிகளே வந்து பாருங்கள் எங்களது
வாழ்க்கை முறை உங்களுக்கு புரியும்). எமது ஊரில்
பெரும்பாலும் கிறிஸ்தவ குடும்பம், ஆனால் எங்களுக்கு ஒரு ஆலயம் மட்டும் தான்
உண்டு. எனதருமை முஸ்லிம் சகோதரர்களுக்காக இரண்டு பெரிய மசூதிகளையும் , எனதருமை இந்து நண்பர்களுக்காக இரண்டு பெரிய அம்பலங்களயும் தாங்கி நிற்கிறது எங்கள் பூத்துறை.
எமது குலதொழில்: மீன் பிடித்தல்
எங்களது ஊரில் 98% மக்களின் குலத்தொழில் மீன் பிடித்தல், கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது இந்து மற்றும் முஸ்லிம் சகோதரர்களும் மீன்பிடி தொழில் செய்வதுண்டு. ஞாயிற்றுகிழமைகளில் கிறிஸ்தவர்களுக்கு ஓய்வும், மற்ற சகோதரர்கள் கடலுக்கும் செல்வார்கள். அதனால் வாரத்தின் அனைத்து நாள்களிலும் நல்ல மீன்கள் கிடைப்பதுண்டு.
எமது வாழ்க்கைமுறை
மருத்துவ தந்தையின் கனவு, தனது பிள்ளையை மருத்துவன் ஆக்குவது. பொறியாளனின் கனவு, தனது பிள்ளையை பொறியாளன் ஆக்குவது. அரசியல்வாதியின் கனவு, தனது பிள்ளையை அரசியல்வாதி ஆக்குவது. ஆனால் எங்களின் பெற்றோரின் கனவு தமது பிள்ளைகள் பள்ளிக்கு சென்று எழுத படிக்க கற்றால் போதும் என்பது. ஆதலால் 1980-ளின் இறுதியில் பிறந்த அனைவரும் குறைந்தது 8-ம் வகுப்பு வரை படித்து இருப்போம்.
பள்ளி பருவத்தில் மறக்காமல் இருக்க நினைப்பது...
வகுப்பு 1-3
- பூத்துறை முதல் பள்ளிக்கூடம்(சின்னத்துறை ) வரை நடந்து செல்வது.
- பள்ளிக்கூடம்முடிந்து வரும்போது ரோட்டில் 1,2,3... எழுதி கொண்டே வீடு வந்து சேருவது.
- சில நாள்கள் கடற்கரை வழியாக வருவது.
- தூங்கு வாணிச்சி துசியன்,கலியொடக்கை,அச்சாறு மற்றும் பல.
- பூத்துறை பள்ளிக்கூடம் பழைய கான்வெண்டில் துவங்கி, திருமண மண்டபம் மற்றும் பள்ளிக்கூடத்தில் படித்தது.
- கார்லொஸ் தொட்டியில் கால்பந்து விளையாட்டு.
- போட்டோ எடுத்து பிலிம்மில் போட்டோ பதிந்ததா என்று கேமராவை திறந்தது.
- சயங்கால வேளைகளில் மட்டை பந்து, வாலு புடுங்கல்,கெலப்பை, ஊட்டி சோறு பண்ணி சோறு,கச்சி,பிலிம் விளையாட்டு, பேப்பர் விளையாட்டு.
- இரவு - திருவிழா காலங்களில் பெரிய திரையில் சினிமா,
- திருமண, ஜானஸ்தான வீட்டில்,சின்ன திரையில் மூன்று சினிமா காண்பிப்பது.
- திருமண வீடுகளில் அம்மா உடன் சென்று, இலவியாரத்துக்கு சாப்பிடுவது.
- Johnalex -ன் புதுநன்மை.
- மிதி வண்டியின் ஆரம்ப காலம்.
- மணெண்ணெய் விளக்கில் படித்தது.
- படிப்பகத்தில் ஒளியும் ஒலியும் பார்ப்பது.
வகுப்பு 9-12
- trucker-ல மற்றும் பஸ்பாஸ்-ல் பள்ளிக்கு செல்வது.
- மதியம் சாப்பிடுவதற்கு நடந்து வீட்டிற்கு வருவது.
- நண்பனுக்கு திருமண அழைப்பிதழ் கிடைத்தால் அனைவரும் சென்று ஒரு கை பார்ப்பது.
- இரு சக்கர வாகனத்தின் ஆரம்ப காலம்.
- பெண்ணுக்க கூட பேசினால் காதல்.
- எங்களது வகுப்பில் 28 பேர் +2 தேர்வு எழுதி ஒருவர் மட்டும் பாஸ்.
- வகுப்பு கட் அடித்து கிரிக்கெட் பார்க்க செல்வது.
- ஊரே ஒன்றாக இருந்து படிப்பகத்தில்கிரிக்கெட் பார்ப்பது.
இளமை தந்த நினைவுகள்...
- சிலநாள் அதிகாலை வேளைகளில் ஒத்தப்பன கள்ளு.
- காலை பழைய வாலிபால் விளையாட்டு திடலில் மூவர் கால்பந்து.
- பாலம் ஆற்றில் பாலத்தின் மேல் இருந்து குதிப்பது.
- வீட்டில் காலை கஞ்சி(மஞ்ச தண்ணி, புளியும் மொளவும்).
- மதிய வேளைகளில் எடப்பாடில் கிரிக்கெட் மற்றும் சீட்டு விளையாட்டு.
- நான்கு மணிக்கு மதிய சாப்பாடு வீட்டில்.
- சயங்கால வேளைகளில் மதிலில் கால்பந்து.
- கடற்கரை மணலில் இரவு அரட்டை.
- சில சமயம் நித்திரவிளை திரை அரங்கில் இரவு காட்சி.
- கடற்கரை மணலில் இரவு தூக்கம்(கிறிஸ்துராஜா குருசடி மற்றும் எடப்பாடு)
- டெஸ்ட் கிரிக்கெட் பார்க்க பொழி கடந்து ராமன்துறை யில் சென்றது.
- மம்மோன் கடை பாயசம் மற்றும் பழரோஸ்ட்.
- மட்டை பந்து, வாலு புடுங்கல்,கெலப்பை, ஊட்டி சோறு பண்ணி சோறு,கச்சி,பிலிம் விளையாட்டு,பேப்பர் விளையாட்டு.
- கடற்கரை மணல் மற்றும் தூக்கம்.
- ஆறில் குளிப்பது மற்றும் நீச்சல்.
No comments:
Post a Comment