தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள்
=================================
1984 - அதிமுக
1989 - திமுக
1991 - அதிமுக+(225/234) & திமுக+(7)
1996 - திமுக+(221/234) & அதிமுக(4)
2001 - அதிமுக+(196/234) & திமுக+(37)
2006 - திமுக+(163/234) & அதிமுக+(69)
2011 - அதிமுக+(203/234) & திமுக+(31)
கடந்த 32 ஆண்டுகால சட்டசபை தேர்தல் முடிவை பார்க்கும் போது மக்கள் ஆளும்
கட்சிகளின் மேல் தங்களது கோபத்தை காட்டி இருக்கிறார்கள். 1984 அதிமுக- விடம் இருந்து திமுக ஆட்சியை
பிடித்த பின்பு கடந்த 32 ஆண்டுகளாக மக்கள் வேறு வழி இல்லாமல் மீண்டும் திமுக & அதிமுகவுக்கு மாறி மாறி ஓட்டு போட்டு தங்களது கோபத்தை வெளி படுத்தினார்களே ஒழிய இரு கட்சிகளையும் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. அதன் விளைவுதான்
எதிர்கட்சி ஆளும்கட்சி ஆக மாறுனதும், ஆளும்கட்சி எதிர்கட்சி ஆக மாறுனதும். மேலும் 2011 வரை திமுகவும், அதிமுகவும் அனைத்து சிறு கட்சிகளின் தோளில் ஏறி
சவாரி செய்து கொண்டு அவர்களை வளர விடாமல் தடுத்து விட்டார்கள். அதன்
விளைவுதான் தமிழ் மாநில காங்கிரஸ் காணமல் போனதும்,கடந்த தேர்தலில் தேமுதிக வளர்ச்சியில் அதிமுக மண்ணை வாரி போட்டதும்.
2006 தேர்தல்(திமுக ஆட்சி)
================================
1.அதிமுக - 32.6 %
2.திமுக - 26.5 %
3.தேமுதிக - 8.4 % (தனித்து)
4.காங்கிரஸ் - 8.4 %(DMK கூட்டணி)
2006 தேர்தலில் தனித்து நின்ற தேமுதிக அனைத்து பிற கட்சிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு வாக்கு(8.4 % ) சதவீதத்தில் 3-ம் இடத்தை பிடித்தது.
2011 தேர்தல் (அதிமுக ஆட்சி)
============================
1.அதிமுக - 38.4%
2.திமுக - 22.4
3.காங்கிரஸ் - 9.3 (DMK கூட்டணி)
4.தேமுதிக - 7.9 % (ADMK கூட்டணி)
ஆனால் 2011 தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேமுதிக தனது வாக்கு(7.9 %) சதவீதத்தை குறைத்து கொண்டது.
2016 தேர்தல்
============
2016 ல் நிலைமை வேறு, இரு பெரும் கட்சிகளும் ஆட்டம் காண ஆரம்பித்து
விட்டன. புது புது கட்சிகளுக்கே தனியாக நிற்கும் தைரியம் வந்து விட்டது.
இது 2011 தேர்தலில் நடந்து இருந்தால் கடந்த 5 வருடங்களும் தமிழகத்தில்
நல்லாட்சி நடந்து இருக்கும்.
மேலும் அனைத்து இதர கட்சிகளும் திமுக & அதிமுக தவிர்த்து ஒன்று சேர்ந்து
நின்றால் ஒழிய இவர்களை ஒழிக்க முடியாது. திமுக & அதிமுகவை தவிர்த்து ஒரேஒரு முறை தமிழகத்தில் வேறு ஆட்சி அமைந்தால், தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை காண முடியும்.
Ref :
Elections_in_Tamil_Nadu
TN Election 2006
TN Election 2011
No comments:
Post a Comment