இன்றைய சமூகத்தில் ஒருவர் கற்றவரா, பண்பாளரா என்பதையெல்லாம் தாண்டி அவர் செல்வந்தரா என்பது முக்கிய தகுதியாய் இருக்கிறது. செல்வந்தராக இருந்தால், அவர் எவ்வழியில் செல்வந்தர் ஆனார் என்பதெல்லாம் பார்க்கப்படுவதில்லை. இன்றைய உலகில் பெரும்பாலானோர் உடனடி பணக்காரராகிவிட வேண்டும் என்று எண்ணி , உழைக்காமல் குறுகிய காலத்தில் பணம் சேர்த்துவிட வேண்டும் என யோசித்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி எப்படியாவது பணம் சேர்த்துவிட வேண்டும் என நினைப்பவர்கள் வெகு சீக்கிரமாக மோசடி கும்பலின் வலையில் சிக்குவதுண்டு.
தினம் தினம் செய்திதாள்களிலும், தொலைகாட்சி பெட்டிகளிலும் மோசடி செய்திகளை பற்றி நாம் கேள்விபட்டாலும் முதலீடு விஷயத்தில் பேராசை அளவுக்கு அதிகமாக இருப்பதால் மோசடி மிக எளிதாக நடக்கிறது. ஒரு மோசடி நடந்து முடிந்த அதே நேரத்தில் அடுத்த மோசடி சத்தமில்லாமல் துவங்கியிருக்கும்.
முந்தைய மோசடிக்கு அதிர்ச்சி தெரிவித்தவர், இந்த மோசடியில்
பாதிக்கப்பட்டவராக இருப்பார்கள். பணமோசடி கும்பல்களின் குறிக்கோளே முதலில் முதலீடு செய்பவர்களுக்கு பணத்தை அள்ளி வழங்கி விட்டு, இறுதியில் ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவது தான்.
இந்த மாய வார்த்தைகளை கேட்டு முதலில் ஒரு ஐம்பாதியிரம் போட்டு தான் பார்ப்போமே என அடுத்த நபர் துவங்குவார். அன்று துடங்கும் அவரது வாழ்வின் கரிகாலம். இதுபோல் மோசடி கும்பலிடம் சிக்காமல் இந்நாள் வரை பாதுகாப்பாக இருந்தவர்கள் எமது மீனவ கிராமங்கள். ஆனால் இப்போது பல குடும்பங்கள் MRDT-ல் பணத்தை இழந்து பரிதவிகின்றனர்.
MRDT நிறுவன மோசடி
MRDT நிறுவனத்தின் மிக கவர்ச்சியான திட்டம் என்பது 1 லட்சம் பணம் செலுத்தி இணைந்தால், மாதம் ரூ.8,000 வீதம் 36 மாதங்களுக்கு வழங்கப்படும் (36x8000=2,88,000).மூன்று வருட முடிவில் அசல் திரும்பத் தரப்படமாட்டாது!. இதே பணத்தை பேங்க்கிலோ, ஊரில் யாரிடமாவது கொடுத்தால் ஒன்று அல்லது இரண்டு பைசா வட்டி கிடைக்கும், MRDT போட்டால் ஒரு வருடத்தில் போட்ட முதல் கையில் கிடைக்கும் என்பது தான் எமாற்று கும்பலின் திட்டம்.
இத்திட்டத்தில் சேர்ந்த நபர்கள் பேசுவதுதான் பணமோசடி கும்பலின் ஆரம்ப கட்ட இலவச விளம்பரம். ஆதலால் இத்திட்டத்தில் ஆரம்பத்தில் சேரும் நபர்களுக்கு, அடுத்தடுத்து வந்துசேரும் நபர்களின் முதலீட்டு பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். "எனக்கு கரெக்டா பணம் வந்துடுச்சு. திரும்பவும் ஒரு ரெண்டு லட்சத்தை கட்டியிருக்கேன். ஒரே வருஷத்துல ரெண்டு லட்சமும் வந்துடும்”, அப்புறம் வரும் பணம் எல்லாம் லாபம்தான்.
மூன்று, நான்கு மதங்கள் கூறியது போல மாத தவணை 8000 வைத்து கொடுத்துவிட்டு, கல்லா நிறைந்த உடன் பணமோசடி கும்பல் தலை மறைவு ஆகிவிட்டார்கள். இப்போது பல குடும்பங்கள் MRDT-ல் பணத்தை இழந்து பரிதவிகின்றனர், பலர் யாரிடம் சென்று முறையிடுவது என கூட தெரியாமல் தத்தளித்து கொண்டு இருகிறார்கள்.
மீண்டும் சில காலம் கழிந்து மற்றொரு பெயரில் நம்மை ஏமாற்ற இப்பொழுதே ஒரு கழுகு கூட்டம் எதோ ஒரு மூலையில் சதி திட்டத்தோடு காத்து கொண்டு இருக்கிறது. நம்முடைய விழிப்புணர்வுதான் நம்மை இது போன்ற மோசடி கும்பலிடம் இருந்து காப்பாற்றும். மக்களே ஏமாறாமல் விழித்துத்திருங்கள்.

No comments:
Post a Comment