Wednesday, 28 November 2018

கடலும் நானும்


கடலும் நானும்

எனக்கும் கடலுக்கும் உள்ள உறவை கூறும் முன், எங்க அப்பாவுக்கும் கடலுக்கும் உள்ள உறவைகூறி எனக்குள் கடக்கலாம்.

எனது அப்பா திருமணத்திற்கு முன்பே 2 boatசொந்தமாக வைத்து தொழில் செய்ததாக எங்கஆத்தா எப்போதும் கூறும். ஆனால் boat எடுத்தசில மாதங்களில் இரண்டு boat ம் ஒன்றன் பின்ஒன்றாக கடலிலிலேயே தாந்ததாம். எனக்குஜபாகம் வந்த பின்பு கூட அப்பா, எங்கஆத்தாவிடம், ஒரு boat கூட எடுக்கலாம்னு பேச்சுஎடுத்தா போதும், ஆத்தா பேய் ஆட்டம் போடும். இருக்குத வலைய வச்சு தொழில் செஞ்சா போதும்வேற ஒண்ணும் போடண்டா.

ஆனால் எனக்கு ஜாபகம் வந்தது முதல் எங்கஅப்பா ஒரு பெரிய மரம்புடியாளி. ஊருல ஆனிஆடி மாதங்களில் ஒரு மரம் புறப்பட்டாலும் அதுஎங்க அப்பா உட்ட மரமாட்டுத்தான் இருக்கும். காலைல 4 மணிக்கு வீட்டில் இருந்து கடலுக்குசென்றால், சில நாள்களில் வீட்டுக்கு வர இரவு 8 மணி வரை ஆகும். காலைல மரம் புடித்துவிட்டுஅப்படியே டிஸ்கோ வலை தள்ளும். அப்போதுஎங்களது வீட்டில் டிஸ்கோ வலை மற்றும்நோத்தோலி வலை மட்டும் தான் உண்டு.(அப்பாவீட்டில் இல்லாத சில நாள்களில் சித்தப்பாவுக்குடிஸ்கோ வலை கட்ட உதவியதும் உண்டு.) ஊரில்தொழில் இல்லாத காலங்களில் மட்டும்கேரளாவில் வள்ளத்தில் தொழிலுக்கு போகும். நான் எட்டாம் கிளாசில் படிக்கும் போது எங்கஅப்பா சொந்தமாக ஒரு வள்ளமும் மெஷினும்வாங்கியது. மூணு நாலு வருசம் அதை வைத்துதொழில் செய்ததாக எனக்கு ஜாபாகம்.
அதன் பின்பு அதை விற்று விட்டு எங்களது ஒருபோத்தியின்(அப்பாவின் தாய் மாமன்) கரமடியைஎடுத்து தொழில் செய்ய தொடங்கிச்சு. அந்தபோத்தி இறந்த பிறகு அது எங்க அப்பாவிடம்வந்தது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்புவரை அது தான் எங்க அப்பாவுக்கு பிடித்தமானதொழில்.

சில வருடங்களுக்கு முன்பு வரை எனதுநண்பர்களும் உறவினர்களும் நான் ஊரில்செல்லும் போது "மக்களே உங்க அப்பா நல்லகடலு அடிச்சித சமயத்திலயும் பண்ட போலமரம்புடிச்ச போறு, கரமடில வல சுத்த போறு. ரெண்டு மூணு தடவ நல்ல அடி பட்டு தப்பிபெழைச்சது. நீங்க கொஞ்சம் சொல்லிவெலக்குங்க மக்களே".
நான் அவர்களுக்கு "ஆ சொல்லுதேன் ஏ" என கூறிவருவேன். ஆனால் இந்நாள் வரை அப்பாவிடம்எதுவும் சொன்னது கிடையாது.

கடந்த ஞாயிறு போன் செய்த போது "மோனேநான் boat ல தொழிலுக்கு வந்தேன். ஊருல ஒருதொழிலும் இல்லை. வீட்டில சும்மா இருந்து நேரம்போவுல. பத்து பதினஞ்சு நாளில அணையுவோம்மோனே".
நானும் பதிலுக்கு "ஓகே அப்பா உடம்ப பாருங்க" என கூறி முடித்து கொண்டேன்.

30 வயசிலேயே சுகரும், பிரசரும் வந்துஅவதிப்படும் இந்த காலத்தில், கடல் தொழில்தான்அப்பாவை இந்த அளவுக்கு ஆரோக்கியமாகஇருக்க உதவுகிறது.

இப்படி கடலே கதியனு கிடந்த அப்பா, நாங்ககடலில் காலு நனச்சிட்டு வந்தாலே ஓட ஓட அடிச்சுவிரட்டும்.

கரமடி

6,7,8 வகுப்புகளில் படிக்கும் நாள்களில்சனிக்கிழமை மற்றும் விடுமுறை வந்தாலேநண்பர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அந்த நாள்களில் நண்பர்கள்கரமடி,நண்டுபந்தம்,தும்பு எறிய என மிகவும்மும்முரமாக இருப்பார்கள். இவர்கள் பேசுவதைகேட்க்கும் போது மிகவும் த்ரில்லலாக இருக்கும்.

ஒருமுறை அப்பா கேரளத்தில் தொழிலுக்குபோனபோது நண்பர்கள் உடன் சேர்ந்து கரமடிவளைக்க சென்றேன். அதுவும் எங்கதாத்தாக்க(அப்பாவின் தாய் மாமன்) கரமடி. வளச்சிட்டு இருக்கும் போதே அப்பாவின்நண்பர்கள் சில பேர் "நாவியன் இல்லாத குறையஅவனுக்க மொவன் தீக்குத்தான்".

நானும் அவர்களை பார்த்து சிரித்துகொண்டேன்.ஆனால் உள்ளுக்குள் மிகவும்பயத்துடன் "இந்த அளுவ அப்பாட்ட சொன்னாநான் சத்தேன்".

மடி கிறிஸ்துராஜா குருசடி பக்கத்தில ஏறிச்சு. மடில நெறய மீனும் பட்டது. சின்ன பசங்க நாங்கஎல்லாரும் வீட்டுல சென்று தண்ணி குடிச்சிட்டுவந்து பங்கு பைக்குத எடத்துல காத்து இருந்தோம். நண்பன் ஒருவன் சொன்னான்,"இந்த மடிலபொதுவா பங்கு பைக்குதது உங்க அப்பா தான். உங்க அப்பா இல்லைனா உங்க ஆண்ட்றோஸ்மாமன்".

அனைத்து ஆட்களும் வந்து வட்டமாகஅமர்ந்தார்கள். சில ஆட்கள் ரூபாய் நோட்டுகளை5,10,20,50,100 என தனி தனியாக பிரித்துஇரண்டாக மடித்து வைத்தார்கள்.

மாமா நடுவில் சென்று அமர்ந்தது. அனைத்துஆட்களையும் கறக்கி ஒரு பார்வை பார்த்து விட்டுஆட்களை நோக்கி "எல்லாரும் வந்தாச்சாமொத்தம் ஆளு ஏத்துற"

உடனே பிலிப்போஸ் எங்க கூட்டத்தை பார்த்து"புள்ள நீங்க ஏத்துற ஆளு?".

"ஏய், நாங்க ஏழு பேரு" என ஆவேல் சொன்னான்.

பிலிப்போஸ் மாமாவை பார்த்து "ஆண்ட்றோஸ்சின்ன பசங்க ஏழு, கெளவமாரு 22, மும்பமாரு 12,வலுவகாறமாரு 15, நொளயமாரு 6 பின்ன நம்மபொட்டன்"

மாமா மீண்டும் "வேற வெல்ல ஆளும் மிஸ்ஆச்சாக்கும்".

"இல்ல மொத்தம் இத்துற அளும்தான்" என ராஜுசொன்னது.

மாமா, அடுக்கி வைத்து இருந்த பைசாவின் மேல்ஒரு டவலை விரிச்சு போட்டது. அதன் பின்புஎங்களை பார்த்து "சின்ன பசங்க ஒவ்வொருத்தராவாங்க"

உடனே ஆவேல் முதல் ஆளா போய் நின்றான். அவன்பின் நாங்கள் ஒவ்வொருவராக சென்றோம்.

நான் போய் நின்றதும் "ஏய், உங்க அளியனுக்கமோவன் நெறய குடுங்க" என மளுக்குசொன்னதும் அனைவரும் சிரித்தார்கள்.

"புள்ள மகேசு நீ மடிவளச்ச வந்தது உங்கஅப்பனுக்கு தெரியுமா?" என ராஜு கேட்டது.

உடனே மாமா, "கும்பாரிமாரு விளிச்சிட்டு வந்துகாணும், இல்லைனா அவன் எங்கு வருவான். ஒருத்தரும் நாவியனுட்ட சொல்லாதைங்கப்பா." என எனக்கு சப்போட்டா பேசிட்டு. டவல் அடிலஇருந்து பைசாவை எடுத்து ஒரு முறுக்கு முறுக்கி"கையை நீட்டு" என் சொன்னது நானும் நீட்டினேன். எனது உள்ளங்கைல வைத்து கைய முறுக்கி பிடியாரிட்டையும் காட்டாதனு சொல்லி தந்தது.

"அம்மா நான் கடப்புறத்துல வெளிக்கு இருக்கபோனப்ப கும்பாரிமாரு மடி வளைச்ச கூட்டிட்டுபோனாங்க" என சொல்லி பங்கு பைசாவைநீட்டினேன்.

"லே மோனே உங்க அப்பாவுக்கு திரிஞ்சாஎன்னைய கொல்லும்." அம்மா ஒருவித பயத்துடன்சொன்னது.

இரண்டு வாரம் கழிச்சு அப்பா கேரளத்துலதொழில் இல்லைனு ஊரில் வந்தது. நானும்அம்மாவும் பயந்தது பயந்ததே இருந்தோம். எப்போவெடி வெடிக்க போகுதோ என.

குடிச்ச போன எடத்துல யாரோ புண்ணியவான்உனக்க மொவன் மடிவளச்ச வந்தான் என போட்டுவிட்டு இருக்கான். ஆன்னு ராத்திரி வீட்டில் வந்துஎனக்கும் அம்மாவும் நல்ல கவனிப்பு கிட்டிச்சு.

நண்டு பந்தம்
நண்பர்கள் அனைவரும் சனிக்கிழமை விடுமுறைஎன தெரிந்தால் வெள்ளி சாயங்காலமே மிகவும்பரபரப்பாக காணப்படுவார்கள். தங்கள்நண்பர்களோடு கடலில் நாளை என்னபண்ணலாம் என கூடி பேசி கொள்வார்கள். என்னை போன்ற முக்கால்வாசி சிறுவர்களும் மடிவளைப்பது, தும்பு எறிவது, நண்டு பந்தம், தூண்டமரம் தள்ளுவது என ரொம்ப பிஸி ஆகஇருப்பார்கள். ஆனால் என்னை போன்ற சிலர்மட்டும் தான் கடலில் நனைந்தாலே வீட்டில் பின்னிபெடல் எடுப்பாங்க.  

அப்பா ஊரில் இல்லாத ஒரு ஒரு நாளில், பள்ளிமுடித்து வரும்போது நான் நண்பன் ஆபேலிடம்
"நானும் நண்டு பந்தம் பாச்ச வரட்டா" எனகேட்டேன்.
"உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்னைய அடிச்சுவெளுக்கும் நீ வேற யாருக்க கூடையாவதுபோப்பா" என சொன்னான்.
"அப்பா 2 நாளுக்கு முன்ன தான் கேரளத்துலபோச்சு, வர எப்படியும் ஒரு மாசம் ஆகும். நம்மதூத்தூர் ஒய்த்துக்கு போய் நண்டு பந்தம்பாச்சலாம் யாருக்கும் தெரியாது" என கூறி ஒருவழியா சம்மதிக்க வச்சேன் ஆபேலை.
"அப்போ ராத்திரி 7 மணிக்கு இர தோண்டபோணும்" என ஆபேல் சொன்னான்.
"ஓகே" என கூறி பிரிந்து சென்றோம்.

அப்போது ராத்திரி வேளைகளில் குடும்பசெபமாலை படிக்கும் வழக்கம் உண்டு. இரவுசெபமாலை முடித்து வெளியில் வந்தபோதுஆபேல் இர தோண்ட போக எனது வீட்டின் முன்என்னை காத்து நின்றான்.

"அம்மா கடப்புறத்துல வெளிக்கு போவுண்டுவாறேன்" என அடுக்களையில் நின்ற அம்மாவிடம்சொன்னேன்.

"மோனே ராத்திரி நல்ல கடலடி சத்தம் கேக்குதுகுப்பைல போ" என அடுக்களையில் இருந்து பதில்வந்தது.அம்மா குப்பை னு சொன்னது எங்ககார்லோஸ் போதிக்க இடத்தை. கார்லோசும் எங்கபோத்தி சிலுவைபிச்சையும் அண்ணன் தம்பிங்க. 

"நான் பாத்து இருக்குவேன், ஆபேல் கூட வாறான்அம்மா" என சொல்லி சென்றேன்.

ராத்திரி நிலா வெளிச்சத்தில் ஆபேல் நண்டுகுழிய தேடி நடந்தான். ஒரு குழியை பார்த்தவுடன்,குழியின் மேல் காதை வைத்து மணலில்படுத்தான்.

"என்னத்த கேக்குத கெடந்து ஆபேலு" நான்கேட்டேன்.

"நண்டு உள்ள இருந்தா சவுண்ட் கேக்கும், சும்மாதோண்டி டைம்மை களயாண்டமில, அதுதான்" எனஆபேல் பதில் சொன்னான்.

"இதுல நண்டு உண்டு நீ தோண்டு, நான் வேறகுழிய பாக்கட்டு" என என்னிடம் சொல்லிசென்றான் ஆபேல்.

நானும் குழிய தோண்ட ஆரம்பிச்சேன், சிறிதுநேரத்தில் கைல நண்டு கடித்து விட்டது
"ஆபேலு" என கத்தினேன்"
"என்ன?, மகேசுன்னு" ஓடி வந்தான்.
"கைல நண்டு கடிச்சது அளியா ".
ஆபேலு ரத்தத்தை பிதுக்கி களஞ்சிட்டு,"பாத்துதோண்ட வேண்டியது தானே" என சொல்லி குழிலகைய விட்டு லாவகமாக நண்டை வெளிலஎடுத்தான்.

ஒரு பெரிய நண்டு, "ஒரு பந்தத்துக்கு இதுஒண்ணும் போதும்" என ஆபேல் கூறினான்.

இர நண்டையெல்லாம் ஒரு குழி தோண்டிபுதைத்து விட்டு அதன் மேல் கொஞ்சம் சவறஎடுத்து அடையாளத்துக்கு போட்டுவிட்டு வீட்டுக்குசென்றோம். 

சனிக்கிழமை காலை திருப்பலி முடிந்து வீட்டுக்குவந்து நொண்டிக்க கடையில் இருந்து வாங்கிவைத்து இருந்த புட்டும் களியும் அவசரஅவசரமாக தின்னு முடித்து விட்டு. "அம்மாகடப்புறத்துல விளையாட போறேன், வர கொஞ்சம்பிந்தும் தேடாதீங்க அம்மா" என சொல்லிகிளம்பினேன்.

"லெய் மோனே மடிவளச்ச போவத அப்பாவுக்குதெரிஞ்சா என்னையும் சேத்து கொல்லும்" எனஅம்மா சொன்னது.

நான் செல்லும் முன்னே கடப்புறத்துல ஆபேல்வேலைகளை ஆரம்பித்து விட்டான்.

கரமடி மால 4 சின்ன துண்டாக கீறி ஒரு மரத்தின்மேல் விரித்தான்.பின்பு எர நண்டை கொன்றுஒவ்வொரு மாலின் மேல் வைத்து சிறிய கல்லால்இரையை சதைத்தான்.அதன்பின் மாலின்அனைத்து முலைகளையும் ஒன்றாக சேர்த்துரோளில் கட்டி விட்டான். ரோளின் அடுத்தமூலையில் ஒரு மரத்துண்டு கட்டப்பட்டு இருந்தது.
கட்டும்போதே "இப்போ இந்த இரயில நண்டு அந்தஅளவு பிடிச்சுதில்லை. மாட்டு கோடலு இல்லைனாசிறாவு கோடலுல நல்லா நண்டு பிடிச்சுதாம்,அடுத்த தடவ அந்த இரயான் பாக்கணும்" எனஆபேலு சொன்னான்.

துணிகளை கழற்றி ஒரு கரமடி வள்ளத்தின் உள்பத்திரமாக வைத்து விட்டு. ஒரே ஒரு அடயில்இரண்டு பெரும் கடலுக்குள் சென்றோம்.அலையடிக்கும் இடத்தை கடந்ததும்
"நீ இந்த அடயில் நீஞ்சு போ நான் கை பாரத்திலவறேன்" என கூறி ஆபேல் வேகமாக நீந்தினான். 

கரையில் இருந்து ஒரு 200 அல்லது 300 மீட்டர்தொலைவில், சிறு இடைவெளி விட்டு ஒவ்வொருபந்தமாக ஆபேல் கடலில் இறக்கினான்.

அனைத்தையும் இறக்கி முடித்து என்னை நோக்கி, "மகேசு, நண்டு புடிச்சா இந்த மரத்துண்டுசின்னதா ஆடும் இல்லைனா நண்டு இதஇழுத்துண்டு போகும். என கூறி முடிப்பதற்குள்

"அன்னா இழுக்குது பாரு", என பந்தத்தை பார்த்துதிரும்பி கூறினான்.  

" மகேசு, மெதுவாக பந்தத்தை இழுக்கனும் சின்னஅனக்கம் தட்டினாலும், நண்டு விட்டுண்டுபோகும்" என கூறியவாறே மெதுவாக இழுத்தான்ஆபேல்.

"இப்ப இத நீ பிடி என கூறி", கச்சாவை கொண்டுகடலுக்குள் மூழ்கி சென்றான். மேலே வரும்போதுஒரு பூவாலன் நண்டோடு வந்தான்.

"மேல வரும்வர இருந்தா சில சமயம் விட்டுண்டுபோவான், அதுயான் குளிச்சு போய் எடுத்தேன்" என பெருமையோடு சொன்னான் ஆபேல்.  

இப்போ எனது முறை, நானும் சிறிது தூரம் மூழ்கிபோய் நண்டு எடுத்தேன். பின் நாள்களில்தரையில் போய் கூட நண்டு எடுத்து வந்ததுஉண்டு. சிறிது நேரத்தில் அனைத்து இரையும்தீர்ந்து வெறும் பந்தம் ஆனது. இருவரும் கரையில்செல்லலாம் என முடிவு எடுத்து கரைக்கு திரும்பிகொண்டு இருந்தோம்.

அந்த நேரம் பார்த்து மிக பெரிய அலைகள் அடிக்கஆரம்பித்தது. ஆபேலின் கையில் நண்டு கச்சாஇருந்தது. இரண்டு பெரும் அடைய பிடித்து நீந்தஆரம்பித்தோம்.

"மகேசு, வலிய மாட்ட எடுத்தா அப்படியே ரெண்டுபேரையும் கரைல கொண்டு விடும். நான்செல்லும்போ அடைய strong அ பிடிச்சிட்டு கிடந்தாமதி."

நானும் "ஓகே" சொன்னேன்.

ஒரு வலிய கடலு வந்தது"மகேசு மாட்டா எடு" எனஆபேல் சொல்லி முடிக்கும் முன் அவனை அதுதூக்கி கொண்டு கரையில் இட்டது. நான் பயந்துவிலங்க பாத்து நீந்தினேன். தொடர்ந்து மிகபெரிய அலைகளாக வந்து கொண்டு இருந்தது.
கரைல நிக்குது ஆபேல பாத்து "லே வா, காப்பாத்துகாப்பாத்து" என சத்தம் போட ஆரம்பித்தேன்.
அவன் கரைல நின்னு "வா வா" என கை காட்டிகொண்டே நின்றான்.

அடிக்குது கடல பாத்து நான் பயந்து போய் அழஆரம்பித்து விட்டேன். ஆபேல் போய் சீட்டுவிளயாடி கொண்டு இருந்த அவுங்க அண்ணன்அன்டனியிடம் நடந்ததை கூறினான். அவுங்கஅண்ணன் கடலில் பாஞ்சு வந்து என்ன கரையில்கொண்டு சேர்த்தது. இப்போ அதைநினைத்தாலும் ஒரு பயம் வரும்.

ஒவ்வொரு ஆனி அடி சீசனுக்கு அப்பா மரம்புடிக்குதத பாத்து பாத்து வளர்ந்தும் கடல உள்ளபயம் இன்னும் மாறவில்லை.

தொடரும்...  

Tuesday, 25 April 2017

பூத்துறையில் வர வேண்டிய மாற்றம் 1 : இலவச குடிநீர்

pic : from Cleetus wilfred FB post

pic : from Cleetus wilfred FB post

கல்லூரி நாள்களில் 10 ரூபாய் கொடுத்து 1 லிட்டர் தண்ணீர் வாங்கும்போது பிற மாவட்ட நண்பர்களிடம் மிக பெருமையாக சொல்லுவது உண்டு, "இதை விட மிக அருமையான தண்ணீர் எங்கள் ஊரில் தெரு குழாய்களில் இலவசமாக கிடைக்கும்". கல்லூரி முடித்து சென்னையில் சென்ற பின்பு தான் தண்ணீர் பாட்டில்கள் நிரந்தர இடம் பிடித்தன தங்கும் அறைகளில். அப்போது நினைத்து கூட பார்த்தது கிடையாது நமது ஊரிலும் தண்ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டி வரும் என !!!.

சிறு வயதில் நம் ஊரில் ஆங்கேங்கே கிணறுகள் இருந்தன. ஆற்றில் தண்ணீர் மிக மோசமாக இருந்தால் அனைவரும் கிணற்றில் தான் குளிப்பதும் துணி துவைப்பதும் நடக்கும். நாகரிக மாற்றம் என கூறி தெரு ஓரங்களில் அடிபம்பு அமைக்க பட்டது பஞ்சாயத்து சார்பில். அது வரை பொது உடமையாக இருந்த கிணறு அதன் பின்பு ஓவ்வரு வீட்டின் மதிலின் உள் அடைக்கலம் ஆனது.

அடுத்த நாகரிக மாற்றத்தில் அடிபம்புகள், தெரு குழாய்கள் ஆக மாறின. தினமும் காலையும், மலையும் தண்ணீர் வந்து மக்கள் மிகவும் சந்தோசமாக காணப்பட்டார்கள். சிறிது காலத்துக்கு பின்பு காலையில் மட்டும் தண்ணீர் வர துவங்கியது. பின்பு இரண்டு மணி நேரம், அடுத்து 1 மணி நேரம் என சுருங்கி இப்பொது தண்ணீர் வந்தாலும் அதை குடிக்க பயன் படுத்த முடியாத அவலநிலை.

கடந்த 7 வருடங்களாக குடிநீரும், AVM கால்வாயும் நம் கண்முன்னே அழிவை நோக்கி சென்றுகொண்டு இருகிறது. நாம் குடித்து, குளித்து குதூகலித்த நீரும் ஆறும் நம் அடுத்த தலைமுறைக்கு எட்டா கனியாகவே உள்ளது. 

திருமண மண்டபங்களும், மேடைகளும் கட்ட காட்டும் முனைப்பு இயற்கையை வளங்களை பாதுகாக்க  பங்கு பேரவையும்,பொதுமக்களும் காட்டுவது இல்லை.

அரசாங்கத்தையும்,அரசியல்வாதிகளையும் குறை கூறும் நம்மால் ஏன் சில லட்ச ருபாய் செலவு செய்து நம் ஊரை சார்ந்த மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க முடியாது. கடந்த 5/6 வருடங்களாக பூத்துறையில் கொடிகெட்டி பறக்கும் business தண்ணீர் business.

ஒரு சாதாரண குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு 3 முதல் 5 குடிதண்ணீர் கேன் தேவைப்படுகிறது, மாதத்திற்கு 12 முதல் 20 தண்ணீர் கேன். ஒரு குடிதண்ணீர் கேனின் விலை 40 ரூபாய் ஆக மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 480 முதல் 800 ரூபாய். ஒரு கணக்கிற்காக நமது ஊரில் 300 குடும்பங்கள் கேன் தண்ணீர் உபயோக படுத்துகிறார்கள் எனில் மாதத்திற்கு 144000 ரூபாய் (300 x 480) முதல் 240000 ரூபாய் (300 x 800).  

2015-ம் வருடம் ஊர் சார்பாக இடம் வாங்கி கிணறு தோண்டப்பட்டது, அரசாங்க அதிகாரிகளின் கூற்றுபடி வேலை முடிந்தது. ஆனால் இந்நாள் வரை ஒரு துளி தண்ணீர் அதிலிருந்து பூத்துறைக்கு வந்து சேரவேயில்லை.

இப்போது புது பங்கு பேரவையின் முயற்சியால் கிணற்றை பரிசோதித்து பார்த்ததில், கிணற்றில் தண்ணீர் இல்லை. கடந்த 6 மாத காலமாக அரசு அதிகாரிகளை கேட்டால் கிணற்றை ஆழப்படுத்த வேண்டும் என கூறுகிறார்கள். பஞ்சாயத்து மற்றும் கலெக்டர் - ஐ கேட்டால் பணம் இல்லை என்கிறார்.  

Bishop எதாவது சுற்று அறிக்கை அனுப்பிய உடன் சமூக வாரியாக வரி போட்டு, சமூக அளவில் போட்டியை உருவாக்கி(1 ம் சமூகம் 10000 , 5 ம் சமூகம் 5000) என பணம் பிரிக்கும் பங்குதந்தையர்கள் இயற்கையை காக்க 1% முனைப்பு காட்டி இருந்தால் இன்று நாம் இந்த அவல நிலைக்கு வந்து நின்றிருக்க மாட்டோம். 

விசாரித்து பார்த்த பொழுது கிணறை ஆழப்படுத்த 2 லட்ச ருபாய் தேவை படுகிறது. பூத்துறை வாழ் நல்லுள்ளங்கள் நினைத்தால் ஓரிரு மாதங்களில் கிணறை ஆழப்படுத்தி நம் மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க முடியும். நம்மால் முடிந்த பண உதவி செய்து நாம் இழந்த நல்ல குடிநீரை மீண்டும் பெறுவோம். 
         
மக்களே நம் மண்ணையும், 
நம் வளங்களையும் நாம் தான் காக்க முடியும். 

ஓன்று படுவோம்!!! வெற்றி அடைவோம்!!!

Monday, 13 June 2016

அழிவை நோக்கி கன்னியாகுமரி மீனவ கிராமங்கள்


வர்த்தக துறைமுகமாம், வர்த்தக துறைமுகம்!!!
ஒருமுறை கூட நாங்கள் அதானிக்கும்,அம்பானிக்கும் வேண்டிதான் அரசாங்கம் நடத்துகிறோம் என நிருபித்திருக்கிறது அரசு. நமது மீனவ கிராமங்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இல்லையெனில் இவர்கள் திட்டமிட்டு நம் வாழ்வாதாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவார்கள்.       

1.நமது தொழில் தேவைக்கு ஒரு மீன்பிடி துறைமுகம் 20-25 வருடங்களாக கேட்டபோது கிடைக்கவில்லை.இப்போது இனயத்தில் வர்த்தக துறைமுகமாம் வர்த்தக துறைமுகம்...

2. 15-20 வருடங்களாக எம் கிராமங்களை பாதுகாக்க ஒரு தூண்டில் வளைவு கேட்டபோது கிடைக்கவில்லை, இப்போதும் வருடத்திற்கு 2 வரி வீடுகளை(50-100 வீடுகளை) இழக்கிறோம்.









3.இரண்டு வருடங்களாக வள்ளவிளை ஊரே நம்மிடமிருந்து துண்டிக்கபட்டு கிடக்கிறது, அதற்கு ஒரு முடிவு இல்லை.

Thursday, 7 April 2016

மாற்றத்தை நோக்கி தமிழக அரசியல்


தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் 
=================================
1984 - அதிமுக
1989 - திமுக
1991 - அதிமுக+(225/234) & திமுக+(7)
1996 - திமுக+(221/234) & அதிமுக(4)
2001 - அதிமுக+(196/234) & திமுக+(37)
2006 - திமுக+(163/234) & அதிமுக+(69)
2011 - அதிமுக+(203/234) & திமுக+(31)

கடந்த 32 ஆண்டுகால சட்டசபை தேர்தல் முடிவை பார்க்கும் போது மக்கள்  ஆளும் கட்சிகளின் மேல் தங்களது கோபத்தை காட்டி இருக்கிறார்கள். 1984 அதிமுக- விடம் இருந்து திமுக ஆட்சியை பிடித்த பின்பு கடந்த 32 ஆண்டுகளாக மக்கள் வேறு வழி இல்லாமல் மீண்டும் திமுக & அதிமுகவுக்கு மாறி மாறி ஓட்டு போட்டு தங்களது கோபத்தை வெளி படுத்தினார்களே ஒழிய இரு கட்சிகளையும் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. அதன் விளைவுதான் எதிர்கட்சி ஆளும்கட்சி ஆக மாறுனதும், ஆளும்கட்சி எதிர்கட்சி ஆக மாறுனதும். மேலும் 2011 வரை திமுகவும், அதிமுகவும் அனைத்து சிறு கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்து கொண்டு அவர்களை வளர விடாமல் தடுத்து விட்டார்கள். அதன் விளைவுதான் தமிழ் மாநில காங்கிரஸ் காணமல் போனதும்,கடந்த தேர்தலில் தேமுதிக வளர்ச்சியில் அதிமுக மண்ணை வாரி போட்டதும்.

2006 தேர்தல்(திமுக ஆட்சி)
================================
1.அதிமுக - 32.6 %
2.திமுக - 26.5 %
3.தேமுதிக - 8.4 % (தனித்து)
4.காங்கிரஸ் -  8.4 %(DMK கூட்டணி)
2006 தேர்தலில் தனித்து நின்ற தேமுதிக  அனைத்து பிற கட்சிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு வாக்கு(8.4 % ) சதவீதத்தில் 3-ம் இடத்தை பிடித்தது. 

2011 தேர்தல் (அதிமுக ஆட்சி)
============================
1.அதிமுக - 38.4%
2.திமுக - 22.4
3.காங்கிரஸ்  - 9.3 (DMK கூட்டணி)
4.தேமுதிக - 7.9 % (ADMK கூட்டணி)

ஆனால் 2011 தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேமுதிக தனது வாக்கு(7.9 %) சதவீதத்தை குறைத்து கொண்டது.

2016 தேர்தல்
============
2016 ல் நிலைமை வேறு, இரு பெரும் கட்சிகளும் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. புது புது கட்சிகளுக்கே தனியாக நிற்கும் தைரியம் வந்து விட்டது. இது 2011 தேர்தலில் நடந்து இருந்தால் கடந்த 5 வருடங்களும் தமிழகத்தில் நல்லாட்சி நடந்து இருக்கும்.

மேலும் அனைத்து இதர கட்சிகளும் திமுக & அதிமுக தவிர்த்து ஒன்று சேர்ந்து நின்றால் ஒழிய இவர்களை ஒழிக்க முடியாது. திமுக & அதிமுகவை தவிர்த்து ஒரேஒரு முறை தமிழகத்தில் வேறு ஆட்சி அமைந்தால், தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை காண முடியும்.    


Ref :

Elections_in_Tamil_Nadu
TN Election 2006
TN Election 2011

Monday, 22 February 2016

ஒரு இளம் எழுத்தாளனின் முகபுத்தக பதிவுகள்



ஐயா Arul Sneham, உங்கள் எழுத்து மிகவும் அழகும் ஆழமுமானது உங்கள்   சிந்தனையை போல. பெரும்பாலும் இளைஞர்கள் copy & paste செய்து பதிவுகள் போடும் இத்தருணத்தில் தினமும் கலையில் சற்றும் சளைப்பே இல்லாமல் யாருக்காவது பயன்படும் என முகபுத்தகத்தில் உங்களது சொந்த கருத்தை எழுதி கொண்டே இருப்பது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது.

நூல் அறுந்த பட்டங்கள் !!!
××××××××××××××××××
வேலை கேட்டு
ஒரு இளைஞன் வந்தான்.
கல்வி தகுதி
யாதென கேட்டேன்.
பட்ட படிப்பு
ஆங்கில இலக்கியம் என்றான்.
ஆங்கல கவிஞர்
இருவரை கூறென கேட்டேன்.
அது நான் அறியேன்
என்றான் இளைஞன்.
அய்யோ பாவம் பட்டம்
நூலறுந்த பட்டங்கள் !!!


காதல் என்பது மழைமேகம்!
××××××××××××××××××××××××××
காதல் என்பது மழைமேகம்
மழையாய் பொழிந்து
மலையில் வீழ்ந்து
நதியில் தவழ்ந்து
கடலில் கலந்தால்
அது யோகம்.

புயலில் சிக்கி
திசை தெரியாமல்
காற்றினில் கரைந்து
பிரிந்து போனால்
அது சோகம்.
எனினும் மனித மனங்களில்
காதல் என்றும் தெய்வீகம்
காதல் இல்லேல் சாதல் சாதல்
பாரதி வரிகள் மேலாகும்.

என்னுயிரே.........
×××××××××××××××
ஏழழகே !
எழுதீ தீரா
பேரழகே.......
ஓவியமும்
நல்ல காவியமும்
கலந்து ஒழுகும்
கலையழகே
தமிழே
என் னுயிர் துடிப்பே........
கதையும்
கவிதையும்
கட்டுரையும்
ஒழுகும்
மனசின்
எண்ணங்களும்
எழுதி மகிழும்
என்னமுதே
இன்ப தமிழே
என்னுயிரே...
 


என் தாய் மொழி
××××××××××××××××

நெற்றியில் முத்தமிட்டு!
பொட்டுவைத்து அழகு பார்த்து!
அன்னையவள் சொன்னமொழி
தமிழ் மொழி.!
நெஞ்சோடணைத்தென்னை
பாலுட்டும் வேளையிலும்!
தலைவருடி புன்னகைத்து
கொஞ்சி மகிழ்ந்திருந்த வேளையிலும்
அன்னையவள் சொன்னமொழி
தமிழ் மொழி!!
விட்டு பிரியாமல்
அடம்பிடித்தயென்னை
தொட்டிலில் கிடத்தியவள்
பிஞ்சு மொழி புன்னகையால்
தாலாட்டு பாடியுறக்கியதும்
எம் தாய் பாட்டு தமிழல்லவோ!
எனைவிட்டு நீ சென்ற பின்னும்
உன் நினைவுகளை நான் பொதிந்து
சுமப்பதும் நினைப்பதும் நீ தந்த தமிழல்லவோ!
அன்னையே நீயும் நீ தந்த தமிழும்
ஒன்றென வளர்ந்தேன்
என்றும் உன் திருவடி
பாதம் பணிந்து
அமுத தமிழால்
உள்ளம் மகழ்ந்தே
வியந்திருப்பேன் !!!
 


பூத்துறையும் வீரமாமுனிவரும்
×××××××××××××××××××××××××××

குமரி மாவட்டத்தின் மேற்க்கு கரையில் அரபிகடலோரம் அமைந்த ஒரு மீனவ கிராம் பூத்துறை.மிகவும் எளிமையும் தாழ்ச்சியுமுள்ள மீனவர்களின் வாழ்விடம். இந்த உயரிய நற்குணம் இந்த கிராமத்தின் தனித்துவமாக விளங்குகின்றது. இந்த நல்ல குணம் இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்று நான் வியந்ததுண்டு. சமீபத்தில் எனக்கு கிடைத்த ஒரு ஆய்வு கட்டுரையில் இதர்க்கான விடை கிடைத்தது. ஆதை உங்களிடம் பகரவே இப்பதிவில் முற்படுகின்றேன்.

1605 -ஆம் ஆண்டு இத்தாலி நாட்டை சார்ந்த பாதர றோபர்ட் தி நொபிலி எனும் கிருத்தவ சாமியார் இந்தியா வந்தடைந்தார்.இந்தியாவின் பன்முக தன்மையும் பண்பாட்டு கலாசாரவும் அவரை மிகவும் கவர்ந்தது.எனவே இந்திய மக்களை நேசிப்பதர்க்கும் சேவிப்பதர்க்கும் இந்தியனாக வாழவே அவர் முடிவெடுத்தார்.கிருத்தவ சாமிமார்கள் அணியும் வெள்ளை அங்கியை தூறந்து இந்திய துறவிகளின் காஷாய வஸ்திரமான காவி ஆடைகளை உடுத்திக்கொண்டார்.சாமானிய மக்களோடு மக்களாக எளிய வாழ்கையை வாழலானார்.பூத்துறை கிராமத்தில் நெடுங்காலம் அவர் வாழ்ந்ததாகவும் அவர்களின் ஆத்மீய குருவாக அவரை மக்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கட்டுரையாளர் விவரிக்கிறார்.சாதாரண மக்களோடு மக்களாக அவர் வாழ்ந்தார் ஓலை பாயில் தரையில் அமர்ந்தும படுத்துறங்கியும் அன்பையும் சேவையயும் மக்களுக்கு தந்து மக்களின் இனிய தமிழை கற்கலானார்.ஒரு இந்திய துறவியாக முற்றிலும் மாறியிருந்த அவரை மக்கள் வீரமாமுனிவர் என்று அன்பொழுக அழைக்கலானார்.பூத்துறையில் எல்லா சமயத்தவரும் கூடிவாழ்ந்து வந்தனர்.ஜாதிமத பேதமின்றி அனைவரையும் நேசித்த அந்த முனிபுங்கவனிடமிருந்து எளிமையும் தாழ்ச்சியும் அந்த மக்களுக்கு வரப்பிரசாதமாய் கிடைத்தது.மத ஒற்றுமையின் சின்னமாக பூத்துறை இன்றும் விளங்குகிறது.கிருத்தவ கோயிலும் முஸ்லீம் பள்ளிகளும் இந்து கோயில்களும் அருகருகே அமைந்து சகோதரத்துவத்தின் புண்ணிய பூமியாக இக்கிராமம் உயர்ந்து நிர்க்கிறது.

வீரமாமுனிவர் பல தமிழ் இலக்கியங்களை கற்றுணரந்து அரிய பல நூல்களை மொழிமாற்றம் செய்தார். திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி போன்ற தமிழ் இலக்கியங்களை மொழிமாற்றம் செய்ததோடு இவைகளின் வெளிச்சத்தில் கிருத்தவத்தை விளக்கினார். இவர் பனை ஓலையில் எழுதிய the christ through the vedantha எனும் ஆய்வு இன்னும் சென்னை நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இந்தியாவுக்கு முதலில் வந்த யேசு சீடன் தோமாஸ் கடலோர கிராமங்களில் பல இடங்களிலும் கல்குரிசுகள் ஸ்தாபித்ததாகவும் அங்கிருந்துதான் கிரித்தவம் இந்தியாவில் வளர துவங்கியதென்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.காலபோக்கில் குருசடிகள் கோயில்களாக மாறியது.அவ்விதம் பூத்துறை கோயிலும் உயர்ந்தபோது தங்களின் ஆத்மீய குருவான வீரமாமுனிவரை மக்கள் ஸ்னாபக யோவானின் உருவில் கண்டனர் என்றும் எனவே அக்கோயில் யோகன்னான் பாதுகாவலனானதாகவும் ஆய்வுகள் கூறுகிறது.

போன தலைமுறையில் கல்வியில் பின்னிட்டிருந்த இக்கிராமம் இப்போது பிரமிக்குமளவிலான கல்வி முன்னேற்றத்தை அடைந்துள்ளது.பலதரப்பட்ட கல்வி கூடங்களும் வியக்க வைக்கும் விளையாட்டரங்கவும் நூலகவும் இந்த மக்களின் பெருமையை பறைசாற்றுகின்றது.கடலோர கிராமங்களில் இப்படி ஒரு விளையாட்டரங்கம் எங்கும் உள்ளதாக தெரியவில்லை.பார்வையாளர் மாடங்களும் அனைத்து விளையாட்டு களங்களும் அந்த ஊர் இளைஞர்களை நேரான பாதையில் இட்டு செல்கின்றது.

உயர்ந்த கல்வியும் நுண்ணறிவும் ஒருங்கே பெற்ற இளைஞர்கள் வீரமாமுனிவருக்கும் பூத்துறைக்குமான உறவை மேலும் ஆய்ந்து அப்பெருமானாருக்கு பூத்துறையில் நினைவு சின்னம் எழுப்பவேண்டும். என் மூததையர்கள் வாழ்ந்ததும் இங்குதான் என்பதால் இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்.


முழுகும் நகையை மீட்டு மறு அடகு வைக்கவா?
×××××××××××××××××××××××××××××××

தமிழக தேர்தல் நெருங்கியாச்சு.நாடக மேடையில் திரைகளும் கெட்டியாச்சு.சீன்கள் ஓட துவங்கியாச்சு.திமுக க்காரன் அதிமுக காரனை கிழிகிழியென கிழிக்க துவங்கியாச்சு.ஆதிமுக காரனும் பம்மாத்து வேலைகளை காட்ட துவங்கியாச்சு.அதிமுகவின் அயோக்கிய ஆட்சி அகற்றப்படவேண்டும். மாற்று கருத்து இல்லவே இல்ல.ஆனால் நடுநிலையாளனின் கண்களுக்கு திமுகவும் அப்புறப்படுத்தவேண்டிய கட்சியாகத்தானே தெரியுது.அதிமுக அகற்றப்படுவதர்க்கு என்ன என்ன அக்கிரமங்கள் காரணமோ அந்த அக்கிரமங்கள் யாவும் திமுகவுக்கும் அப்படிமே பொருந்துதே.ரட்டை பெத்த புள்ளமாதிரியல்ல தெரியிது.ஒரே ஒரு வித்தியாசம்.அதிமுக காரன் ஊழல் செஞ்சா பளிச்சணு வெளியே தெரியுது.திமுக காரன் செய்ற ஊழல் நுணுக்கமா இருக்கும்.எளிதில கண்டு பிடிக்க முடியாது.சக்கரியா கமிஷனும் அப்படித்தானே சொன்னாங்க. ஆக அதிமுக விடமிருந்து ஆட்சிய பறிச்சு திமுகவிடம் தருவது என்பது வட்டியில் முழுகிய நகையை மீண்டு மறு அடமானம் வைப்பதர்க்கு ஒப்பாகும்.எனவே வட்டியும் முதலும் தள்ளுபடி செய்து பொருளை மக்களிடம் சேர்க்கும் மக்கள் நல கூட்டணிக்கு இம்முறை வாக்கிளித்து பாரப்போமே.ஒண்ணும் குடி முழுகி போகாது.மக்கள் அரசு மலரும்.தமிழனும் தமிழகவும் தலை நிமரும்.நல்லது பிறக்கும்.

இவன்தான் மீனவன்
×××××××××××××××××

இன்று பட்டணம் பொழிமுகம் வள்ளத்தில் கடந்து முள்ளூர்துறை நோக்கி நடந்துகொண்டிருந்தேன்.ஒரு புதிய இனோவா கார் மணலில் புதைந்து கிடந்தது.ஒரு இளைஞன் வண்டியை எடுக்க பகீரத பிரயத்தினம் கெய்துகொண்டிருந்தான்.நானும் அவனை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் அவனோடு சேர்ந்து கொண்டேன்.வண்டி மேன்மேலும் புதைந்து கொண்டிருந்தது.உதவிக்கு யாரும் இல்லை. சர் என்று ஒரு குட்டியானை பிரேக்கை போட்டது.தொழில் முடிந்து ஏத்தினங்களையும் ஏத்திக்கொண்டு பசியோடு வீடுதிரும்பிகொண்டிருந்த ஐந்தாறு மீனவர்கள் வண்டியிலிருந்து சாடி இறங்கினார்கள்.நேரே புதைந்த வண்டியண்டை வந்தனர்.புதைந்த வண்டியை பூபோல தூக்கி உரிய இடத்தில் நிறுத்திவிட்டு ஒரு நன்றியை கூட எதிர்பார்க்காமல் வந்த வேகத்தில் சென்றுவிட்டனர். நான் புளகாங்கிதம் அடைந்தேன்.என் மனம் சொல்லிக்கொண்டது"இவன்தான் மீனவன். 

தமிழ் எழுத தெரியாமல் திணறும் தமிழ் நாளேடுகள!
×××××××××××××××××××××××××××××
×××××××××××××××××××××××
ஒரு மொழியின் இலக்கண இலக்கியங்கள் சால பொருந்தியதாக ஊடகங்கள், குறிப்பாக நாளேடுகள் திகழவேண்டும்.ஒரு எழுத்து பிழையை மக்கள் திருத்திக்கொள்ளவேண்டுமானால் நாளேடுகளை பார்த்து திருத்துமளவுக்கு நாளேடுகள் தரமானதாக இருக்கவேண்டும். அந்த அளவுக்கு நாளிதழ்களில் சரியாக எழுதவேண்டும்.ஆனால் தமிழ் நாளேடுகளின் நிலைமை மிகவும் பரிதாபம். ஒரு நாளேட்டை எடுத்துக்கொண்டால் தினமும் நூறு எழுத்து பிழைகளை எண்ணிவிடலாம்.இதற்க்கும் மேலாக எண்களோடு தொடர்ந்து வருகின்ற எழுத்தை சரிவர எழுத எந்த நாளிதழுக்கும் தெரியவில்லை. உதாகரணமாக இரண்டாவது என்பதை,எண்ணும் எழுத்துமாக எழுதவேண்டுமானால் 2 --ஆவது என்று எழுதவேண்டும்.ஆனால் அனைத்து நாளிதழ்களிலும் 2 --வது என்று எழுதுகின்றனர்.இதை ரண்டுவது என்றுதான் வாசிக்கமுடியும்.இந்த தவறை சுட்டிக்காட்டி ஒருபுதிய பெரிய தமிழ் நாளிதழுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் இந்த தவறை சளைக்காமல் தொடருகின்றனர்.அதைப்போலவே ன,ண-- ல,ள,ழ -- ர,ற - போன்ற எழுத்துக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் தமிழை கையாளுகின்றனர்.ஒரு சாமானியன் எழுதுவது வேறு பத்திக்கை எழுதுவது வேறு.மொழியோடு உரிய பழக்கமுள்ள தகுதியானவர்களை கொண்டு திருத்தம் பார்த்து அச்சில் ஏற்றவேண்டும்.மொழியை வளர்க்க வேண்டிய நாளேடுகள் மொழியை அழிக்கக்கூடாது.நண்பர்கள் இப்பதிவை பகர்ந்து நாளிதழ்களின் அறிவுக்கு எட்ட செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இருவரிடமும் ஒரே ஒரு கேள்வி ?
×××××××××××××÷××××××××××××××
××××
தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடமும் பொன்மனசெல்வி தங்க தாரகை புரட்சி தலைவி J. ஜெயலளிதா அவர்களோடும் ஒரு சாமனியனில் ஒரே ஒரு கேள்வி.உங்கள் இருவரிடமும் மலைபோல் குவிந்து கிடக்கும் பல ஆயிரக்கணக்கான கோடிக்கான சொத்து எங்கிருந்து வந்தது. நீங்கள் இருவரும் இதற்க்கு பதில் சொல்லப்போவதில்லை. ஆனால் இவ்விருவருக்குமாக கச்சை கட்டிக்கொண்டு களத்தில் சதிராடும் அவர்களின் விசுவாசிகள் நெஞ்சை தொட்டு நிதானமாக பதில் சொல்லட்டு.

மக்கள் நலகூட்டணி காலத்தின் கட்டாயம்
××××××××××××××××××××××××××××

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கவேண்டிய காரியத்தை இப்போது கம்யூணிஸ்டுகள் உணர்ந்திருக்கிறார்கள்.மக்கள் நலனில் அக்கறையுள்ள நல்லதொரு கூட்டணியை துவக்க காலம் முதலே அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும்.மாறி மாறி இந்த ஊழல் பெரச்சாளிகளை வளர்த்துவிட்டதன் தண்டனையை அவர்கள் அனுபவித்துவிட்டார்கள்.அப்படி ஒரு அணியை அன்றே உருவாக்கியிருந்தால் இந்த அவலநிலை தமிழ்நாட்டுக்கு வந்திருக்காது.கம்யூணிஸ்டுகளும் இப்படி கட்டெறும்பாக தேய்ந்து போயிருக்கமாட்டார்கள்.கடைசி நேரத்திலாவது நல்லபுத்தி வந்ததென்று ஆறுதலடைவோம்.
 
ஐம்பது ஆண்டுகளாக மாறிமாறி கொள்ளைப்போட்டு கொழுத்துப்போன மொரட்டு கூட்டத்தோடு இந்த தேர்தலில் நேருக்குநேர் மோதவேண்டியுள்ளது.இமயம்போல் குவிந்துகிடக்கும் கொள்ளை முதலோடும் அதிகார கூலிப்பட்டாளத்தோடும் குருசேத்திரக்களத்தில் வெறிகூச்சல் கும்பலோடு மக்கள் கூட்டணி மோதித்தான் ஆகவேண்டும்.குறைந்தபட்ச செயல் திட்டத்தோடு பிறகட்சிகளை இணைத்து சக்தியை பெருக்க வேண்டிய அவசியம் உண்டு.கோலியாத்தை வீழ்த்த தாவிதுக்கு கவட்டயில் வைத்து ஏவ சிறு கூளாங்கள் தேவைப்பட்டது.விருப்பு வெறுப்புக்களை முன்னிறுத்தி வேரறுக்கவேண்டிய விஷவிருச்சத்தை வெட்டி வீழ்த்தாமல் விட்டுவிட கூடாது.தமிழகத்தை சுத்தப்படுத்த ஒன்றுபட நேசமுள்ள அனைவரும் ஒன்றுபட்டு ஆகத்தான் வேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.குளிர்காய நினைக்கும் குபுத்திகளின் மாயவலையில் வீழ்ந்து விடாதீர்.இன்று தமிழகத்தில் உருவாகிவரும் தன்னெழுர்ச்சியை ஒருமுகப்படுத்தவேண்டிய கடமை ஒவ்வொரு முர்போக்காளனுக்கும் உண்டு.உணர்ச்சியை தூண்டும் நச்சு குறைகளை களையுங்கள்.நம் முன்னுள்ள ஒரே நோக்கம் பெரச்சாளிகளை பொறியில் அடைத்தாகணும்.இலக்கை நோக்கி பயணிப்போம்.அடுத்து என்ன என்பதை அப்புறம் பார்போம்.தமிழகத்தை தாக்கியுள்ள கொடிய நோயை குணப்படுத்துவோம். வீண் வதந்திகளை விரட்டியடிப்போம்.ஆஹா என்றெழுந்ததுபார் யுகபுரட்சி எனும் பாரதி கனவு நிஜமாகட்டும்.வாசியோடு போர்களம் வாரீர். வெ ற்றி நமதே அது நிச்சயமே! 

எங்க ஓட்டு விலைக்கில்ல !
×××××××××××××××××××××××
தேர்தல் களம் நெருங்கி வருகிது
களவாணிக்கூட்டமிங்கு ஆடபோகுது
கொள்ளை முதல் மூட்டையெல்லாம்
கொண்டுவந்து சேத்திடுவாங்க - நம்ம
வாக்கை விலை பேசி வாங்கி சென்றிடுவாங்க
ஜாதிமத உறவெல்லாம் பேசிடுவாங்க
சாராய சரக்கெல்லாம் தந்திடுவாங்க
கைநிறைய காசு தந்து கவர்ந்திடுவாங்க
தேர்தல்மட்டும் சுத்தி சுத்தி வந்து நம்மை சூழ்ந்திடுவாங்க
கனஜோராக கச்சவடம் பாத்திடுவாங்க
வாக்குறுதி வாரி வீசி ஏச்சிடுவாங்க
வந்த வேலை முடிஞ்சதெண்ணா ஓடி போயிடுவாங்க
மறுதேர்தல் வரும்வரைக்கும் அவர் வருவதில்லிங்க
எத்தனை நாள் எங்களையும் ஏச்சுப்போட்டு ஒடிபோவீங்க
இனி ஏமாற மாட்டோமுங்க போங்க
எங்க ஓட்டு விலைக்கு இல்லிங்க


விஜய காந்து அவர்களுக்கு ஓர் திறந்த மடல்.
×××××××××××××××××××××××

ஐயா விஜயகாந்து அவர்களே உங்களுக்கெங்கள் உள்ளார்ந்த வாழ்த்துக்களும் வணக்கவும் உரித்தாக்குகின்றேன். 2011-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் காலத்தில் கடைந்தெடுத்த ஊழல் அரசை விரட்டுவதர்க்கு நீங்கள் எடுத்துக்கொண்ட முயர்ச்சிகளை பாராட்டாமல் இருக்க முடியாது. ஆண்டுகொண்டிருந்த மக்கள் விரோத அரசை தனிமைப்படுத்த நீங்கள் ஏற்படுத்திய கூட்டணியும் நல் வெற்றியை பெற்றது.ஆளுங்கட்சி எதிர்கட்சி அந்தசை கூட பெறமுடியாமல் முடக்கப்பட்டது.எதிர்கட்சி அந்தஸ்தையும் நீங்கள் தக்கவைத்து கொண்டீர்கள்.எல்லாம் நல்லபடியாக நடந்தேறியது. சில மாதங்களிலையே அம்மா ஆட்சியின் அவலங்கள் படிப்படியாக வெளிவர துவங்கிவிட்டது.நீங்களும் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டீர்கள். அம்மாவின் ஆட்சி காலம் முடியப்போகிறது.தேர்தல் தேதி அறிவிக்காத குறையாக நெருங்கி விட்டது.கூட்டணிகள் உருவாக துவங்கி விட்டது.மிகவும் இக்கட்டான அரசியல் சூழ்நிலமை.ஆண்ட இரு கட்சிகளுமே ஒரே குட்டயில் ஊறிய மட்டைகள்.போன தேர்தலில் யாரை ஒழிக்கவேண்டுமென்று ஜெயலளிதாவை ஆதரித்தீர்களோ அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து இப்போது ஆதிமுக வை ஒழிப்பது எப்படி சரியாக இருக்கும்.ஒருவேளை திமுக வென்று ஆட்சி அமைத்தால் கடந்த காலங்களில் செய்த ஊழல்களை செய்யமாட்டார்கள் என்பதர்க்கு என்ன உத்தரவாதம்.இன்று நேற்றல்ல 25 ஆண்டுகளாக ஊழலையே தொழிலாக கொள்ளைப்போட்டவர்கள்.இவர்கள் முழு பூஷணிக்காயை . விழுங்குவார்களானால் அவர்கள் முழு ஒட்டகத்தையே விழுங்கி விடுவார்கள்.சரி மீண்டும் ஐந்தாண்டுகள் திமுக ஆளுவதென்றே வைத்து கொள்வோம்.இவர்கள் ஆட்சி கிடைப்பதுவரை எல்லா வேடங்களையும் காட்டுவார்கள்.கிடைத்தபின்பு பழய கிழவி கதை தானே.அப்போது மீண்டும் அதிமுக வுடன் கூட்டணி அமைத்து திமுக வை துரத்துவீர்களா.இப்படியே காலம் பூராவும் குண்டு சட்டியிலையே குதிரை ஓட்டி பழக போகிறீர்களா.இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக எழுந்து நிர்க்கும் மக்கள் நல கூட்டணியை நீங்கள் ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்.உண்மையில் தமிழகத்தின் மாற்றத்திர்க்கான கொள்கை பிடிப்புள்ள கூட்டணி அதுமட்டுமே.நீங்கள் இருக்க வேண்டிய கூட்டணியும் அதுதான்.உங்கள் அரசியல் எதிர்காலம் இப்போது நீங்கள் எடுக்கும் முடிவில் அடங்கியுள்ளது.அதிகாரத்திர்க்காக கொள்கையில்லா சந்தர்ப்பவாத கூட்டணிகளோடு இணைந்தால் உங்களை காலத்திரை மூடி மறைத்து விடும் .நல்ல முடிவை அறிவியுங்கள்.எதிர்காலம் உங்களை வரவேற்க காத்திருக்கிறது 

தமிழக அரசியலில் யோக்கியமான தலைவரு இன்று யாரு?
××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××

தமிழக அரசியல்வாதிகள் ஒருவர்மாறி ஒருவரை ஒடுகாலி,அரசியல் நிலையற்றவர்,சீட்டுக்காக அலைபவர் என்று குற்றம் சாட்டுவதுண்டு.அப்படி ஓடாத காலிகளாக யாரும் இல்லை என்பதே நிதன்சனமான உண்மை.திமுக கூட்டு வைக்காத கட்திகள் இந்தியாவில் இல்லை.அதிமுகவும் அப்படித்தான்.பமகவும் அதே பாணிதான்.பாஜகவும் அதேதான்.தேமுதிக இப்பம் சீட்டும் பணவும் கொடுக்குற பக்கம்.கொள்கையும் கோட்பாடும் அந்த கட்சிக்கு இருக்கிறமாதிரி தெரியல.அந்த கட்சியின் யோக்கியதாம்சம் சீக்கிரமே வெளிப்படபோகுது.மதிமுகவும் இவர்களின் வழித்தோன்றல்தான்.ஆனா ஊழல் இல்லை.கம்யூணில்ட்களும் பாஜகவ தவிர மற்றபடி அப்படித்தான்.இந்த அரசியல் வாதிங்களே இப்படித்யான்.தேர்தல் வரும்வரைக்கும் மக்களுக்காக உருகி உருகி பேசுவாங்க.தேர்தல் வந்துட்டா கிடைக்கிற சீட்டும் கோடிகளையும்தான் கணக்கு பார்ப்பாங்க கண்ணா இருப்பாங்க.சீமானும் அவருக்க பங்குக்கு நிறையவே பேசிட்டாரு.ஆளு புதுசு.அவரும் என்னாணு இப்பம் தெரிஞ்சு போகும்.எனவே சுத்த சுயம் பிரகாசம் யாரும் இல்ல. இருப்பதில யாரு பறவா இல்லை என்பதை பார்க்கத்தான் நம்ம ஜனநாயகத்தில இடமிருக்கு.எதுஎப்படியோ ஒரு மாற்றம் கண்டிப்பா தேவைப்படுது.இந்த அண்ணன் தங்கையை நம்பி பாழாபோனது போதும்.இனிமே நாடு தாங்காது.ஆட்சியை பிடிப்பதுவரை இப்படி விழுந்து விழுந்து பேசுவதை பாக்காதிங்க.ஆட்சி கையில் கிடைக்கட்டும் ஆடுற ஆட்டத்தையும் போடுற வேஷங்களையும் அப்பம் பாருங்க.அதனால இவங்க தமிழகத்தை தூக்கிபிடிச்சது போதும்.நாலு லட்சம் கோடிக்கு தமிழகத்தை மார்வாடிக்கிட்ட வச்சிட்டாங்க.இன்னும் ஏமாந்தா மோடிக்கு போட்டியா தமிழகத்தை பயிந்து பட்டா போட்டிடுவாங்க.நல்லா பாத்துக்குங்க. மாத்தி யோசிங்க,மாற்றத்தை கொண்டு வாங்க.கொண்டு வருவீங்களா நீங்க கொண்டுவருவீங்களா!! 

விலை போகாத விருதுகள்
××××÷××××××××××××××××××

மத்திய அரசால் வழங்கப்பட்டுவரும் விருதுகள் சமீபகாலமாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.தகுதியானவர்கள் புறக்கணிக்கப்படுவதும் சம்மந்தமில்லாதோர் விருதுகள் பெறுவதும் சகசமாகிவிட்டது. மத்திய அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான நடபடிகளை எதிர்க்கும் வண்ணம்பலரும் விருதுகளை திருப்பி தந்து கோண்டிருக்கின்றனர்.பலர் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளை வேண்டவே வேண்டாம் என்று கும்பிடுபோட்டு ஒதுங்கி கொண்டனர்.ஆக மத்திய அரசின் விருதுகள் மதிப்பற்ற ஒரு பொருளாக மாறிவட்டது.எனவே அரசியல் ஆதாயத்துக்காக சந்தடி வாக்கில் இப்போது இது வினியோகிக்கப்படுகின்றது.விலையில்லா பொருள் யாருக்கு கொடுத்தால் என்ன கொடுக்காமல் இருந்தால் என்ன,போகட்டும் விட்டுவிடுவோம். 

தேர்தல் வியாபாரங்கள்
××××××××××××××××××××××

தேர்தல் காலம் துவங்கிவிட்டது.பலவிதமான வியாபாரங்கள் படுவேகமாக அரங்கேற துவங்கிவிடும்.தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் கட்சிகளிடமிருந்து போட்டிபோட விண்ணப்ப படிவங்கள் வாங்க கணிசமான தொகையை 10000 ரூபாயிலிருந்து மேல்நோக்கி பல ஆயிரங்களை முதல் கட்டமாக செலுத்த வேண்டும்.வேட்பாளர் தேர்வுக்குபின் பல ஆயிரம் கோடிகளை கட்சிதலைமை வேட்பாளருக்கு தேர்தல் செலவுகளுக்காக பகிர்ந்தளிக்கும்.வேட்பாளரும் தன்பங்குக்கு பல கோடிகளை இணைத்து ஓட்டு வியாபாரத்துக்கான முஸ்திப்புகளை செய்வார்.மாவட்டம், வட்டம் ,கிளைகளென பணம் பிரவாகமெடுத்து ஓடும்.பல்வேறு மட்டங்களில் செயல்படும் புரோக்கறுகளுக்கான கமிஷன் போக வாக்காளனுக்கு ஆயிரமோ இரண்டாயிரமோ தேறும்.இந்த பண பட்டுவாடா படு ரசமானது. அதை விவரிக்க வேறொரு பதிவு போடுமளவுக்கு ஏராளமான நுணுக்கங்கள் அதிலுமுண்டு.

அடுத்து வேறு முக்கியமான ஒரு வியாபாரமும் நடந்தேறும்.சில இடை நிலை கட்சிகள்.ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை பிரகடனப் படுத்தும் வீரசூரர்கள். தவறென கண்டால் ஓங்கி அறைவதிலும் காறி துப்புவதிலும் சீமான்கள். இவர்கள் தேர்தலின் கடைசி நிமிடம் வரையிலும் எந்த அணியோடும் சேரமாட்டார்கள். ஆனால் எல்லா அணிகளோடும் ரகசிய பேரங்களை நடத்திக்கொண்டிருப்பார்கள். இவர்களின் நோக்கமெல்லாம் அதிகமான சீட்டுகளும் ஆதிகமான பல கோடி ருபாயும்தானே ஒழிய கொள்கையோ கோட்பாடுகளோ மக்கள் நலனோ ஏதுமில்லை. இவர்கள் ஜனநாயகத்தை விழுந்து விழுந்து தூக்கிபிடிப்பார்கள். ஆனால் தேர்தல் வந்த உடன் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக பலகோடிகளை சம்பாதிப்பதர்க்கு கங்கணம் கட்டிக்கொள்வார்கள்.

இன்று தமிழகத்தின் தேர்தல் களம் தெளிந்து விட்டது.ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளை போட்டவர்கள் இரு அணிகளாக அரங்குக்கு வந்துவிட்டார்கள்.கம்யூணிஸ்ட்களும் வைக்கோவும் திருமாவளவனும் மூன்றாவது அணியாக களத்தில் நிர்க்கிறார்கள்.இவர்கள் ஆண்டவர்களுமல்ல ஊழல் வாதிகளுமல்ல.ஆனால் சில இடைநிலை கட்சிகள் தாளம் போடுகின்றன. இவர்களின் நோக்கம் புரியவில்லை.ஒன்று மட்டும் புரிகிறது. சில சீட்டுகளுக்காகவும் சில கோடிகளுக்காகவும் எப்படிப்பட்ட தகிடுதத்தங்களையும் வெட்கமில்லாமல் இவர்கள் அரங்கேற்றிவிடுவார்கள். சாமானிய வாக்களன் கேட்கிறான் நீ எந்த அணி.ஓ!பேரம் முடியவில்லை என்றா பதில் சொல்வாய். இந்த மானம் கெட்ட பிழைப்பு எதுக்கு. பன்னெடுங்காலமாகவே தமிழகத்து மக்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் ஏமாற்றப்ளட்பார்கள்,இன்னுமா இன்னொரு ஏமாற்று வித்தகன்.தூ..... 

இந்தியா ஒரு ஜனநாயக நாடா?
********************************

 நமது நாடு ஜனநாயக குடியரசு என்றும் உலகிலயே மிகபெரிய ஜனநாயக நாடு என்றும் ஊடகங்களில் அடிக்கடி பார்த்திருக்கின்றோம்.ஜனநாயகம் என்றால் என்ன எனும் கேள்வி இப்பொழுது மனதில் எழ தொடங்கியிருக்கின்றது. ஜனநாயகத்துக்கு சுருக்கமான விளக்கம் யாதெனில் பெரும்பாலான மக்களின் கருத்துக்களை சிறுபகுதி மக்களும் ஏற்றுக்கொண்டு சமத்துவமாக வாழ்வதேயாகும்.ஆனால் இந்தியாவில் அப்படி நடப்பதாக தெரியவில்லை.ஒரு சிறுபகுதியினரான பெரும்முதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதர்க்கு பெரும்பகுதியான உழைக்கும் மக்களை பிழிந்தெடுக்கும முறைதான் இங்கு நடைமுறையில் உள்ளது.எளியவன் மேன்மேலும் வறுமையில் உழல்வதும் தனவான் நாளொருவண்ணவும் பொழுதொரு திண்ணவுமாக செழிப்பதும்தான் காணமுடிகிறது.அரசு எந்திரங்களும் நீதிமன்றங்களும் முதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளது.அவர்களின் ஏவல் கூலிகளாக இயங்குகின்றன. ஜனநாயகத்தின் உச்ச கட்ட நிலையான தேர்தல்களிலும் முதலாளிகளின் கையே ஓங்கி நிர்க்கிறது.மூட்டை மூட்டையாக நோட்டை கொண்டுவந்து ஓட்டு வியாபாரம் பார்த்து அரசு எந்திரத்தை மொத்தாக சேப்பிலே போட்டுவிட்டு போய்விடுகின்றனர் முதலாளிகள்.இதுதான் நமது ஜனநாயகம்.ஒன்றுமறியாத குடிமகன் பீற்றி திரிகிறான் இது ஜனநாயக நாடு என்று.மன்னிக்கவும் இது ஜனநாயகமல்ல முதலாளித்துவ ஜனநாயகம். அவர்களின் நலன்களை காக்கும் அரசு.அவர்களுக்காய் சட்டங்கள் வளையும்.நீதி தேவதை கண்ணைமூடிக்கொள்வாள். 

டில்லி நாடகம்!!
×××××××××××××××

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது டில்லி அரசாங்கம்.மீண்டும் தடைபோட்டது உச்சநீதிமன்றம்.வேடிக்கையான விளையாட்டு.ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் ஜல்லாக்கட்டு தடை செய்யப்பட்டிருந்தது.தமிழகத்து மக்களின் உணர்ச்சிப்போராட்டங்களுக்கு பணிந்து மத்திய அரசு அனுமதி வழங்கியது.ஆனால் தமிழர்களை ஏமாற்றவேண்டுமென்ற நயவஞ்சக நோக்கோடு ஒரு போலியான உத்தரவை மோடி அரசு வழங்கியுள்ளது.உச்சமன்றத்தின் தடை ஆணை நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கின்மீது மத்திய அரசு எப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மைய அரசுக்கு தெரியாதா? இவ்வளவு தூரம் சட்டஞானமே இல்லாத அறிவிலிகளா மத்திய அரசின் சட்டத்துறை. உச்சநீதிமன்றத்தின் தடை ஆணையை செயலிழக்க செய்யும் அவசர சட்டமொன்றை பிரகடனப்படுத்தியல்லவா ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கவேண்டும். இந்த சாதாரண சட்டநுணுக்கம் கூட தெரியாத ஞானசூனியங்களா மத்திய அரசை ஆட்சி செய்கின்றது. இல்லை தமிழர்களை அப்படி நினைத்து ஏளனம் செய்கிறான்களா?நீ யாரென்று அறிய உன் தலைவன் யாரென்று அறிந்தால் போதும் என மத்திய அனசு நம்மை கிண்டலடிக்கின்றதா.நீதிக்கும் ஞாயத்துக்கும் ஒத்துவராத சட்டங்களை இனி நாம் கண்டுகொள்ளவேண்டியதில்லை.அய்யா மார்கண்டயகட்ஜீ அவர்களின் சமயோசிதமான யோசனைப்படி தமிழர்களின் பொங்கள் வீர விளையாட்டை சிறப்புடன் கொண்டாடுவோம். எந்த உத்தரவும் தேவை இல்லை.நமது பண்பாட்டையும் நமது கலாசார நாகரிகத்தையும் நாமே காப்போம். கொட்டுங்கள் முரசை,எட்டு திக்கும் அது மாற்றொலி கொள்ளட்டும்.