Wednesday, 28 November 2018

கடலும் நானும்


கடலும் நானும்

எனக்கும் கடலுக்கும் உள்ள உறவை கூறும் முன், எங்க அப்பாவுக்கும் கடலுக்கும் உள்ள உறவைகூறி எனக்குள் கடக்கலாம்.

எனது அப்பா திருமணத்திற்கு முன்பே 2 boatசொந்தமாக வைத்து தொழில் செய்ததாக எங்கஆத்தா எப்போதும் கூறும். ஆனால் boat எடுத்தசில மாதங்களில் இரண்டு boat ம் ஒன்றன் பின்ஒன்றாக கடலிலிலேயே தாந்ததாம். எனக்குஜபாகம் வந்த பின்பு கூட அப்பா, எங்கஆத்தாவிடம், ஒரு boat கூட எடுக்கலாம்னு பேச்சுஎடுத்தா போதும், ஆத்தா பேய் ஆட்டம் போடும். இருக்குத வலைய வச்சு தொழில் செஞ்சா போதும்வேற ஒண்ணும் போடண்டா.

ஆனால் எனக்கு ஜாபகம் வந்தது முதல் எங்கஅப்பா ஒரு பெரிய மரம்புடியாளி. ஊருல ஆனிஆடி மாதங்களில் ஒரு மரம் புறப்பட்டாலும் அதுஎங்க அப்பா உட்ட மரமாட்டுத்தான் இருக்கும். காலைல 4 மணிக்கு வீட்டில் இருந்து கடலுக்குசென்றால், சில நாள்களில் வீட்டுக்கு வர இரவு 8 மணி வரை ஆகும். காலைல மரம் புடித்துவிட்டுஅப்படியே டிஸ்கோ வலை தள்ளும். அப்போதுஎங்களது வீட்டில் டிஸ்கோ வலை மற்றும்நோத்தோலி வலை மட்டும் தான் உண்டு.(அப்பாவீட்டில் இல்லாத சில நாள்களில் சித்தப்பாவுக்குடிஸ்கோ வலை கட்ட உதவியதும் உண்டு.) ஊரில்தொழில் இல்லாத காலங்களில் மட்டும்கேரளாவில் வள்ளத்தில் தொழிலுக்கு போகும். நான் எட்டாம் கிளாசில் படிக்கும் போது எங்கஅப்பா சொந்தமாக ஒரு வள்ளமும் மெஷினும்வாங்கியது. மூணு நாலு வருசம் அதை வைத்துதொழில் செய்ததாக எனக்கு ஜாபாகம்.
அதன் பின்பு அதை விற்று விட்டு எங்களது ஒருபோத்தியின்(அப்பாவின் தாய் மாமன்) கரமடியைஎடுத்து தொழில் செய்ய தொடங்கிச்சு. அந்தபோத்தி இறந்த பிறகு அது எங்க அப்பாவிடம்வந்தது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்புவரை அது தான் எங்க அப்பாவுக்கு பிடித்தமானதொழில்.

சில வருடங்களுக்கு முன்பு வரை எனதுநண்பர்களும் உறவினர்களும் நான் ஊரில்செல்லும் போது "மக்களே உங்க அப்பா நல்லகடலு அடிச்சித சமயத்திலயும் பண்ட போலமரம்புடிச்ச போறு, கரமடில வல சுத்த போறு. ரெண்டு மூணு தடவ நல்ல அடி பட்டு தப்பிபெழைச்சது. நீங்க கொஞ்சம் சொல்லிவெலக்குங்க மக்களே".
நான் அவர்களுக்கு "ஆ சொல்லுதேன் ஏ" என கூறிவருவேன். ஆனால் இந்நாள் வரை அப்பாவிடம்எதுவும் சொன்னது கிடையாது.

கடந்த ஞாயிறு போன் செய்த போது "மோனேநான் boat ல தொழிலுக்கு வந்தேன். ஊருல ஒருதொழிலும் இல்லை. வீட்டில சும்மா இருந்து நேரம்போவுல. பத்து பதினஞ்சு நாளில அணையுவோம்மோனே".
நானும் பதிலுக்கு "ஓகே அப்பா உடம்ப பாருங்க" என கூறி முடித்து கொண்டேன்.

30 வயசிலேயே சுகரும், பிரசரும் வந்துஅவதிப்படும் இந்த காலத்தில், கடல் தொழில்தான்அப்பாவை இந்த அளவுக்கு ஆரோக்கியமாகஇருக்க உதவுகிறது.

இப்படி கடலே கதியனு கிடந்த அப்பா, நாங்ககடலில் காலு நனச்சிட்டு வந்தாலே ஓட ஓட அடிச்சுவிரட்டும்.

கரமடி

6,7,8 வகுப்புகளில் படிக்கும் நாள்களில்சனிக்கிழமை மற்றும் விடுமுறை வந்தாலேநண்பர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அந்த நாள்களில் நண்பர்கள்கரமடி,நண்டுபந்தம்,தும்பு எறிய என மிகவும்மும்முரமாக இருப்பார்கள். இவர்கள் பேசுவதைகேட்க்கும் போது மிகவும் த்ரில்லலாக இருக்கும்.

ஒருமுறை அப்பா கேரளத்தில் தொழிலுக்குபோனபோது நண்பர்கள் உடன் சேர்ந்து கரமடிவளைக்க சென்றேன். அதுவும் எங்கதாத்தாக்க(அப்பாவின் தாய் மாமன்) கரமடி. வளச்சிட்டு இருக்கும் போதே அப்பாவின்நண்பர்கள் சில பேர் "நாவியன் இல்லாத குறையஅவனுக்க மொவன் தீக்குத்தான்".

நானும் அவர்களை பார்த்து சிரித்துகொண்டேன்.ஆனால் உள்ளுக்குள் மிகவும்பயத்துடன் "இந்த அளுவ அப்பாட்ட சொன்னாநான் சத்தேன்".

மடி கிறிஸ்துராஜா குருசடி பக்கத்தில ஏறிச்சு. மடில நெறய மீனும் பட்டது. சின்ன பசங்க நாங்கஎல்லாரும் வீட்டுல சென்று தண்ணி குடிச்சிட்டுவந்து பங்கு பைக்குத எடத்துல காத்து இருந்தோம். நண்பன் ஒருவன் சொன்னான்,"இந்த மடிலபொதுவா பங்கு பைக்குதது உங்க அப்பா தான். உங்க அப்பா இல்லைனா உங்க ஆண்ட்றோஸ்மாமன்".

அனைத்து ஆட்களும் வந்து வட்டமாகஅமர்ந்தார்கள். சில ஆட்கள் ரூபாய் நோட்டுகளை5,10,20,50,100 என தனி தனியாக பிரித்துஇரண்டாக மடித்து வைத்தார்கள்.

மாமா நடுவில் சென்று அமர்ந்தது. அனைத்துஆட்களையும் கறக்கி ஒரு பார்வை பார்த்து விட்டுஆட்களை நோக்கி "எல்லாரும் வந்தாச்சாமொத்தம் ஆளு ஏத்துற"

உடனே பிலிப்போஸ் எங்க கூட்டத்தை பார்த்து"புள்ள நீங்க ஏத்துற ஆளு?".

"ஏய், நாங்க ஏழு பேரு" என ஆவேல் சொன்னான்.

பிலிப்போஸ் மாமாவை பார்த்து "ஆண்ட்றோஸ்சின்ன பசங்க ஏழு, கெளவமாரு 22, மும்பமாரு 12,வலுவகாறமாரு 15, நொளயமாரு 6 பின்ன நம்மபொட்டன்"

மாமா மீண்டும் "வேற வெல்ல ஆளும் மிஸ்ஆச்சாக்கும்".

"இல்ல மொத்தம் இத்துற அளும்தான்" என ராஜுசொன்னது.

மாமா, அடுக்கி வைத்து இருந்த பைசாவின் மேல்ஒரு டவலை விரிச்சு போட்டது. அதன் பின்புஎங்களை பார்த்து "சின்ன பசங்க ஒவ்வொருத்தராவாங்க"

உடனே ஆவேல் முதல் ஆளா போய் நின்றான். அவன்பின் நாங்கள் ஒவ்வொருவராக சென்றோம்.

நான் போய் நின்றதும் "ஏய், உங்க அளியனுக்கமோவன் நெறய குடுங்க" என மளுக்குசொன்னதும் அனைவரும் சிரித்தார்கள்.

"புள்ள மகேசு நீ மடிவளச்ச வந்தது உங்கஅப்பனுக்கு தெரியுமா?" என ராஜு கேட்டது.

உடனே மாமா, "கும்பாரிமாரு விளிச்சிட்டு வந்துகாணும், இல்லைனா அவன் எங்கு வருவான். ஒருத்தரும் நாவியனுட்ட சொல்லாதைங்கப்பா." என எனக்கு சப்போட்டா பேசிட்டு. டவல் அடிலஇருந்து பைசாவை எடுத்து ஒரு முறுக்கு முறுக்கி"கையை நீட்டு" என் சொன்னது நானும் நீட்டினேன். எனது உள்ளங்கைல வைத்து கைய முறுக்கி பிடியாரிட்டையும் காட்டாதனு சொல்லி தந்தது.

"அம்மா நான் கடப்புறத்துல வெளிக்கு இருக்கபோனப்ப கும்பாரிமாரு மடி வளைச்ச கூட்டிட்டுபோனாங்க" என சொல்லி பங்கு பைசாவைநீட்டினேன்.

"லே மோனே உங்க அப்பாவுக்கு திரிஞ்சாஎன்னைய கொல்லும்." அம்மா ஒருவித பயத்துடன்சொன்னது.

இரண்டு வாரம் கழிச்சு அப்பா கேரளத்துலதொழில் இல்லைனு ஊரில் வந்தது. நானும்அம்மாவும் பயந்தது பயந்ததே இருந்தோம். எப்போவெடி வெடிக்க போகுதோ என.

குடிச்ச போன எடத்துல யாரோ புண்ணியவான்உனக்க மொவன் மடிவளச்ச வந்தான் என போட்டுவிட்டு இருக்கான். ஆன்னு ராத்திரி வீட்டில் வந்துஎனக்கும் அம்மாவும் நல்ல கவனிப்பு கிட்டிச்சு.

நண்டு பந்தம்
நண்பர்கள் அனைவரும் சனிக்கிழமை விடுமுறைஎன தெரிந்தால் வெள்ளி சாயங்காலமே மிகவும்பரபரப்பாக காணப்படுவார்கள். தங்கள்நண்பர்களோடு கடலில் நாளை என்னபண்ணலாம் என கூடி பேசி கொள்வார்கள். என்னை போன்ற முக்கால்வாசி சிறுவர்களும் மடிவளைப்பது, தும்பு எறிவது, நண்டு பந்தம், தூண்டமரம் தள்ளுவது என ரொம்ப பிஸி ஆகஇருப்பார்கள். ஆனால் என்னை போன்ற சிலர்மட்டும் தான் கடலில் நனைந்தாலே வீட்டில் பின்னிபெடல் எடுப்பாங்க.  

அப்பா ஊரில் இல்லாத ஒரு ஒரு நாளில், பள்ளிமுடித்து வரும்போது நான் நண்பன் ஆபேலிடம்
"நானும் நண்டு பந்தம் பாச்ச வரட்டா" எனகேட்டேன்.
"உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்னைய அடிச்சுவெளுக்கும் நீ வேற யாருக்க கூடையாவதுபோப்பா" என சொன்னான்.
"அப்பா 2 நாளுக்கு முன்ன தான் கேரளத்துலபோச்சு, வர எப்படியும் ஒரு மாசம் ஆகும். நம்மதூத்தூர் ஒய்த்துக்கு போய் நண்டு பந்தம்பாச்சலாம் யாருக்கும் தெரியாது" என கூறி ஒருவழியா சம்மதிக்க வச்சேன் ஆபேலை.
"அப்போ ராத்திரி 7 மணிக்கு இர தோண்டபோணும்" என ஆபேல் சொன்னான்.
"ஓகே" என கூறி பிரிந்து சென்றோம்.

அப்போது ராத்திரி வேளைகளில் குடும்பசெபமாலை படிக்கும் வழக்கம் உண்டு. இரவுசெபமாலை முடித்து வெளியில் வந்தபோதுஆபேல் இர தோண்ட போக எனது வீட்டின் முன்என்னை காத்து நின்றான்.

"அம்மா கடப்புறத்துல வெளிக்கு போவுண்டுவாறேன்" என அடுக்களையில் நின்ற அம்மாவிடம்சொன்னேன்.

"மோனே ராத்திரி நல்ல கடலடி சத்தம் கேக்குதுகுப்பைல போ" என அடுக்களையில் இருந்து பதில்வந்தது.அம்மா குப்பை னு சொன்னது எங்ககார்லோஸ் போதிக்க இடத்தை. கார்லோசும் எங்கபோத்தி சிலுவைபிச்சையும் அண்ணன் தம்பிங்க. 

"நான் பாத்து இருக்குவேன், ஆபேல் கூட வாறான்அம்மா" என சொல்லி சென்றேன்.

ராத்திரி நிலா வெளிச்சத்தில் ஆபேல் நண்டுகுழிய தேடி நடந்தான். ஒரு குழியை பார்த்தவுடன்,குழியின் மேல் காதை வைத்து மணலில்படுத்தான்.

"என்னத்த கேக்குத கெடந்து ஆபேலு" நான்கேட்டேன்.

"நண்டு உள்ள இருந்தா சவுண்ட் கேக்கும், சும்மாதோண்டி டைம்மை களயாண்டமில, அதுதான்" எனஆபேல் பதில் சொன்னான்.

"இதுல நண்டு உண்டு நீ தோண்டு, நான் வேறகுழிய பாக்கட்டு" என என்னிடம் சொல்லிசென்றான் ஆபேல்.

நானும் குழிய தோண்ட ஆரம்பிச்சேன், சிறிதுநேரத்தில் கைல நண்டு கடித்து விட்டது
"ஆபேலு" என கத்தினேன்"
"என்ன?, மகேசுன்னு" ஓடி வந்தான்.
"கைல நண்டு கடிச்சது அளியா ".
ஆபேலு ரத்தத்தை பிதுக்கி களஞ்சிட்டு,"பாத்துதோண்ட வேண்டியது தானே" என சொல்லி குழிலகைய விட்டு லாவகமாக நண்டை வெளிலஎடுத்தான்.

ஒரு பெரிய நண்டு, "ஒரு பந்தத்துக்கு இதுஒண்ணும் போதும்" என ஆபேல் கூறினான்.

இர நண்டையெல்லாம் ஒரு குழி தோண்டிபுதைத்து விட்டு அதன் மேல் கொஞ்சம் சவறஎடுத்து அடையாளத்துக்கு போட்டுவிட்டு வீட்டுக்குசென்றோம். 

சனிக்கிழமை காலை திருப்பலி முடிந்து வீட்டுக்குவந்து நொண்டிக்க கடையில் இருந்து வாங்கிவைத்து இருந்த புட்டும் களியும் அவசரஅவசரமாக தின்னு முடித்து விட்டு. "அம்மாகடப்புறத்துல விளையாட போறேன், வர கொஞ்சம்பிந்தும் தேடாதீங்க அம்மா" என சொல்லிகிளம்பினேன்.

"லெய் மோனே மடிவளச்ச போவத அப்பாவுக்குதெரிஞ்சா என்னையும் சேத்து கொல்லும்" எனஅம்மா சொன்னது.

நான் செல்லும் முன்னே கடப்புறத்துல ஆபேல்வேலைகளை ஆரம்பித்து விட்டான்.

கரமடி மால 4 சின்ன துண்டாக கீறி ஒரு மரத்தின்மேல் விரித்தான்.பின்பு எர நண்டை கொன்றுஒவ்வொரு மாலின் மேல் வைத்து சிறிய கல்லால்இரையை சதைத்தான்.அதன்பின் மாலின்அனைத்து முலைகளையும் ஒன்றாக சேர்த்துரோளில் கட்டி விட்டான். ரோளின் அடுத்தமூலையில் ஒரு மரத்துண்டு கட்டப்பட்டு இருந்தது.
கட்டும்போதே "இப்போ இந்த இரயில நண்டு அந்தஅளவு பிடிச்சுதில்லை. மாட்டு கோடலு இல்லைனாசிறாவு கோடலுல நல்லா நண்டு பிடிச்சுதாம்,அடுத்த தடவ அந்த இரயான் பாக்கணும்" எனஆபேலு சொன்னான்.

துணிகளை கழற்றி ஒரு கரமடி வள்ளத்தின் உள்பத்திரமாக வைத்து விட்டு. ஒரே ஒரு அடயில்இரண்டு பெரும் கடலுக்குள் சென்றோம்.அலையடிக்கும் இடத்தை கடந்ததும்
"நீ இந்த அடயில் நீஞ்சு போ நான் கை பாரத்திலவறேன்" என கூறி ஆபேல் வேகமாக நீந்தினான். 

கரையில் இருந்து ஒரு 200 அல்லது 300 மீட்டர்தொலைவில், சிறு இடைவெளி விட்டு ஒவ்வொருபந்தமாக ஆபேல் கடலில் இறக்கினான்.

அனைத்தையும் இறக்கி முடித்து என்னை நோக்கி, "மகேசு, நண்டு புடிச்சா இந்த மரத்துண்டுசின்னதா ஆடும் இல்லைனா நண்டு இதஇழுத்துண்டு போகும். என கூறி முடிப்பதற்குள்

"அன்னா இழுக்குது பாரு", என பந்தத்தை பார்த்துதிரும்பி கூறினான்.  

" மகேசு, மெதுவாக பந்தத்தை இழுக்கனும் சின்னஅனக்கம் தட்டினாலும், நண்டு விட்டுண்டுபோகும்" என கூறியவாறே மெதுவாக இழுத்தான்ஆபேல்.

"இப்ப இத நீ பிடி என கூறி", கச்சாவை கொண்டுகடலுக்குள் மூழ்கி சென்றான். மேலே வரும்போதுஒரு பூவாலன் நண்டோடு வந்தான்.

"மேல வரும்வர இருந்தா சில சமயம் விட்டுண்டுபோவான், அதுயான் குளிச்சு போய் எடுத்தேன்" என பெருமையோடு சொன்னான் ஆபேல்.  

இப்போ எனது முறை, நானும் சிறிது தூரம் மூழ்கிபோய் நண்டு எடுத்தேன். பின் நாள்களில்தரையில் போய் கூட நண்டு எடுத்து வந்ததுஉண்டு. சிறிது நேரத்தில் அனைத்து இரையும்தீர்ந்து வெறும் பந்தம் ஆனது. இருவரும் கரையில்செல்லலாம் என முடிவு எடுத்து கரைக்கு திரும்பிகொண்டு இருந்தோம்.

அந்த நேரம் பார்த்து மிக பெரிய அலைகள் அடிக்கஆரம்பித்தது. ஆபேலின் கையில் நண்டு கச்சாஇருந்தது. இரண்டு பெரும் அடைய பிடித்து நீந்தஆரம்பித்தோம்.

"மகேசு, வலிய மாட்ட எடுத்தா அப்படியே ரெண்டுபேரையும் கரைல கொண்டு விடும். நான்செல்லும்போ அடைய strong அ பிடிச்சிட்டு கிடந்தாமதி."

நானும் "ஓகே" சொன்னேன்.

ஒரு வலிய கடலு வந்தது"மகேசு மாட்டா எடு" எனஆபேல் சொல்லி முடிக்கும் முன் அவனை அதுதூக்கி கொண்டு கரையில் இட்டது. நான் பயந்துவிலங்க பாத்து நீந்தினேன். தொடர்ந்து மிகபெரிய அலைகளாக வந்து கொண்டு இருந்தது.
கரைல நிக்குது ஆபேல பாத்து "லே வா, காப்பாத்துகாப்பாத்து" என சத்தம் போட ஆரம்பித்தேன்.
அவன் கரைல நின்னு "வா வா" என கை காட்டிகொண்டே நின்றான்.

அடிக்குது கடல பாத்து நான் பயந்து போய் அழஆரம்பித்து விட்டேன். ஆபேல் போய் சீட்டுவிளயாடி கொண்டு இருந்த அவுங்க அண்ணன்அன்டனியிடம் நடந்ததை கூறினான். அவுங்கஅண்ணன் கடலில் பாஞ்சு வந்து என்ன கரையில்கொண்டு சேர்த்தது. இப்போ அதைநினைத்தாலும் ஒரு பயம் வரும்.

ஒவ்வொரு ஆனி அடி சீசனுக்கு அப்பா மரம்புடிக்குதத பாத்து பாத்து வளர்ந்தும் கடல உள்ளபயம் இன்னும் மாறவில்லை.

தொடரும்...  

No comments:

Post a Comment