Showing posts with label #ties #poothurai #sxcee. Show all posts
Showing posts with label #ties #poothurai #sxcee. Show all posts

Sunday, 5 January 2020

8. கால்பந்து நினைவுகள் - TIES

"TIES" எனும் அனைத்து தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குமான விளையாட்டு திருவிழா வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும்.

நான் இரண்டாம் வருடம் கல்லூரியில் படிக்கும் போது முதன் முதலாக அதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்களது முதல் ஆட்டம் அண்ணா பல்கலைகழக அணியுடன். விளையாட்டு மைதானத்தில் இறங்கும் முன் உடற்பயிற்சி ஆசிரியர் எங்கள் அனைவரையும் பார்த்து, "இதுவரை TIES கால்பந்தில் ஒரு மேட்ச்சில் கூட நம் ஆணி வெற்றி பெற்றது இல்லை. இன்றுடன் நாம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வெற்றியுடன் திரும்புங்கள்" என கூறினார்.

அனைத்து வீரர்களும் மைதானத்தில் இறங்கி தங்களை தயார் படுத்திக்கொண்டு இருந்தனர். நான் மெதுவாக நடந்து சென்று ஜோயிடம், "டேய் இதுவரை ஒரு மேட்ச் கூட நம்ம காலேஜ் வின் பண்ணுனது இல்லையா" என கேட்டேன். 

"வின்னா?, அப்படின்னா!!! இதுவரை TIES ல் ஒரு கோல் கூட அடிச்சது இல்லை, நீ என்னடானா வின்ன பத்தி கேக்குத" என மிகவும் நக்கலாக பதில் சொன்னான். 

எதிர் அணியானா அண்ணா பல்கலைகழக அணி மைதானத்தில் களம் இறங்கியது. அனைத்தும் வீரர்களும் விளையாட்டு கோட்டாவில் கல்லூரியில் சேர்ந்தவர்கள் என விளையாட்டுக்கு முந்தய நாள் சக வீரர்கள் பேசி கொண்டார்கள். மேலும் 3 north இந்தியன்ஸ் வீரர்களும் உண்டு. விளையாட்டு ஆரம்பித்து முதல் பாதி முடியும் வேளையில் அண்ணா  பல்கலைகழகம் கோல் அடித்தது. இரண்டாவது பாதியில் நான் கேப்டனிடம் சென்று , "நான் மேல விளையாடுதேன், ஆன்றோவ offline ல போடுங்க". கேப்டனும் சம்மதித்தார். 

உடனே ஆன்றோவிடம் சென்று, "பந்து கிடைத்த உடனே மேல அடி நான் ஓடி போய் எடுப்பேன். நீயும், ஜோயும்   பாஸுக்கு வருங்க. கண்டிப்பா கோல் அடிக்க முடியும். நம்ம அடிக்கலாம்" என இரண்டு பேரிடமும் கை கொடுத்து விட்டு ஸ்ட்ரைக்கர் பொசிஷன் ல போய் நின்றேன்.                    

விளையாட்டு தொடங்கியவுடன் எதிர் அணியின் கடைசி தடுப்பாட்ட வீரரின் சற்று முன்னால் சென்று நின்றேன். இரண்டாம் பாதியின் ஒரு பத்து நிமிடங்கள் முடிந்து இருக்கும், எதிர் அணி வீரனிடம் இருந்து  ஆன்றோ பந்தை தட்டி எடுத்தான். 

D-box சற்று முன்னால் நின்ற நான் "அளியா அடி அடி" என கத்தி கொண்டே முன்னால் ஓடினேன். கடைசி தடுப்பாட்ட வீரனும் என்னை துரத்தி கொண்டு வந்தான்.ஆன்றோ பந்தை தூக்கி அடித்தான், பந்து அனைத்து வீரர்களையும் கடந்து எனது வலது புறமாக வந்து விழுந்தது. எனது இடது தோள் கொண்டு எதிர் அணி வீரனை தடுத்த நான் இடது கை கொண்டு அவனது ஜெற்சியை பிடித்து இழுத்து கொண்டேன், அவனுக்கு என்னை கடந்து செல்ல இயலவில்லை. பந்து தரையில் விழுந்து சற்று எழும்பிய உடன், வலது காலால் பந்தை ஓங்கி கோல் கம்பத்தை நோக்கி அடித்தேன். கண் இமைக்கும் நொடியில் பந்து கோல் கீப்பரை கடந்து கோல் வலையில் சென்று தஞ்சம் அடைந்தது. 

எங்களது PD மற்றும் அனைத்து வீரர்களும் மைதானத்தின் உள்ளே வந்து கட்டி தழுவி வாழ்த்து தெரிவித்தனர். நடுவர் அனைவரையும் வெளியேற்றி விட்டு மீண்டும் விளையாட்டை தொடந்தார். விளையாட்டு சமநிலை அடைந்தவுடன் மீண்டும் ஆன்றோவ stopper ஆக்கிவிட்டு நான் மிடில் ல விளையாட்டை தொடர்ந்தேன். ஆட்டம் சமநிலையில் முடிந்தது. அதன் பின்பு பெனால்டியில் எங்களது அணி வெற்றி பெற்றது. 

16 வருடங்கள் கடந்த பின்பும், அந்த கோலும் வெற்றியும் மறக்க முடிய நினைவாக தொடர்கிறது.